- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில்லும் இல்லை, ஹார்டிக் பாண்டியாவும் இல்லை, அடுத்த டி20 கேப்டன் இவர்தான் – விவரம் இதோ

ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி விளையாடும் அனைத்து டி20 தொடர்களையும் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் :

நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றாலும் அந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சூரியகுமார் யாதவ் வயது முதிர்வு காரணமாக கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த டி20 கேப்டனாக சுப்மன் கில் அல்லது ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. அதேபோன்று தற்போது டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் அக்சர் பட்டேலும் டி20 போட்டிகளுக்கான கேப்டன்சி போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகளவு போட்டிகளில் விளையாடாத அவர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் பெரும்பாலும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

எனவே அவரது அனுபவத்தையும், அவரது தலைமை பண்பையும் கணக்கில் கொண்டுள்ள பிசிசிஐ ஒரு வடிவ கிரிக்கெட் போட்டியிலாவது அவருக்கு கேப்டன்சி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு பும்ராவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு பதிலா அந்த பையனை தான் செலக்ட் பண்ணிருக்கணும் – திலீப் வெங்சர்க்கார் கருத்து

எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -