ஆயிரம் சொல்லுங்க, ஷாஹீன் அப்ரிடியை விட பும்ரா தரத்தில் குறைந்தவர் தான் – முன்னாள் பாக் வீரர் கருத்து

Jasprit Bumrah Shaheen Afridi
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் என்றாலே அதில் எப்போதும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அண்டை நாடுகளான இந்த இரு நாடுகளுக்கிடையே கடந்த பல வருடங்களாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனைகள் கிரிக்கெட்டிலும் எதிரொலித்ததால் இரு நாடுகளும் நேருக்கு நேர் கிரிக்கெட் போட்டிகளில் மோதுவது கிடையாது. மாறாக ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுவதால் சமீப காலங்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உலக அளவில் பெரிய புகழை பெற்றுள்ளது.

INDvsPAK

- Advertisement -

கிரிக்கெட் என்பதையும் தாண்டி இரு நாட்டினருமே அதை கௌரவமாக பார்ப்பதால் அதில் வெற்றி பெறுவதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் முழுமூச்சுடன் போராடி போட்டியில் அனலை தெறிக்க விடுவார்கள். அதேபோல் களத்திற்கு வெளியே இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டும் நிலையில் ஒருசில முன்னாள் வீரர்களும் அவ்வப்போது வார்த்தைப் போரில் மோதிக்கொள்வது உண்டு.

நாங்கதான் பெரியவங்க:
அதுபோன்ற சமயங்களில் பல நேரங்களில் போட்டி என்பதையும் தாண்டி இந்தியாவை விட நாங்கள்தான் பெரியவர்கள் என்று அந்த நாட்டவர்கள் பேசுவது வழக்கமான ஒன்றாகும். குறிப்பாக ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர்தான் சிறந்தது, விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்பது போன்ற பல வகைகளில் அவ்வப்போது அந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் உருட்டுவது சமீப காலங்களாக வாடிக்கையாகி வருகிறது.

shaheen afridi 1

அந்த வகையில் உலக அளவில் உலகத்தரம் வாய்ந்த நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை விட பாகிஸ்தானைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி தான் சிறந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆக்கிப் ஜாவேத் புதியதாக ஒரு கருத்தை காற்றில் பறக்கவிட்டு உள்ளார். கடந்த 1992-ஆம் ஆண்டு ஜாம்பவான் இம்ரான் கான் தலைமையில் உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த அவர் பும்ராவை விட சாஹீன் அப்ரிடி தான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார் என்று பேசியுள்ளார்.

- Advertisement -

ஷாஹீன் மாஸ், பும்ரா சுமார்:
இது பற்றி பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீப கலங்கலாக பந்துவீசும் ஹரிஷ் ரவூப் உலக அளவில் சராசரியாக அதிக வேகத்தில் வீசும் பவுலராக காட்சியளிக்கிறார். அவரின் ஆக்ரோஷமும் வேகமாக பந்துவீச ஓடி வருவதும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கிறது. ஆனால் பும்ரா அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை. இருப்பினும் அது போன்ற பாடி லாங்குவேஜ் கொண்ட பவுலரை தான் அவர்கள் (இந்தியர்கள்) விரும்புகின்றனர். அதே சமயம் ஷாஹீத் அப்ரிடியின் வளர்ச்சி உச்சத்தை நோக்கி செல்கிறது. மறுபுறமும் பும்ராவின் வளர்ச்சி எந்தவித ஏற்றமும் இல்லாமல் சீராக செல்கிறது”

Aakib Javed

“டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அவரின் செயல்பாடுகள் ஷாஹீன் அப்ரிடியை போல அச்சுறுத்தலை கொடுப்பதாக இல்லை. மேலும் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், ஷடாப் கான், பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் போன்றவர்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் அபார வளர்ச்சியை கண்டு வருகிறது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறும் சாகின் அப்ரிடி சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் பந்துவீச்சு துறையில் முக்கிய பவுல்ராக உருவெடுத்துள்ளார். அதிலும் கடந்த வருடம் 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்ட அவர் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரின் விக்கெட் எடுத்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலக கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் மண்ணை கவ்வ செய்ய முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Bumrah

அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2021 வருடத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி வழங்கும் சர் கர்பீல்டு சோபர்ஸ் விருதையும் அவர் வென்றிருந்தார். மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா வித்தியாசமான ஆக்சனுடன் பந்து வீசுகிறாரே தவிர சாஹீன் ஆப்ரிடி போன்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை போல அச்சுறுத்தலை கொடுக்கும் அளவுக்கு பந்து வீசுவதில்லை என்று ஆக்கிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்ன சொல்றிங்க ! 66 வயது முன்னாள் இந்திய வீரருக்கும் 38 வயது பெண்ணுக்கும் திருமணமா – முழுவிவரம் இதோ

இருப்பினும் 28 வயதிலேயே இதுவரை இந்தியாவிற்காக 303* விக்கெட்டுகளை எடுத்து சமீபத்தில் பிரபல விஸ்டன் பத்திரிக்கையால் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டதை அவர் படிக்கவில்லையா என இந்திய ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement