சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாடியிருந்தது.
பாகிஸ்தான் அணிக்கு இவரே அச்சுறுத்தலாக இருப்பார் :
அந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து குரூப் சுற்று போட்டிகளில் தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறது.
இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும். அந்த வகையில் இந்த போட்டியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் முக்கிய ஆயுதமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதுவரை ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அது தவிர்த்து பெரிய அளவில் ரன்களை குவிக்க விடாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அபாயகரமான பவுலராகவும் ஏற்கனவே திகழ்ந்துள்ளார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான பார்மிற்கு திரும்பியுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா நிச்சயம் இம்முறையும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அச்சுறுத்தலாக இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : இதை செஞ்சா போதும் சூரியகுமாரை அவுட்டாக்கலாம்.. பாகிஸ்தானுக்கு மஞ்ரேக்கர், வாசிம் அக்ரம் ஆலோசனை
அடிக்கடி காயத்தை சந்திக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுத்து விளையாடி வரும் வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிவிட்டு கடைசி லீக் போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.



