ஃபிளாட்டான பிட்ச்சில் மாஸ் காட்டிய அவர் தான் வெறித்தனமான பவுலர்.. மைக்கேல் கிளார்க் வியப்பு

Micheal Clarke
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 209, சுப்மன் கில் 104 ரன்கள் அடித்ததை விட ஒன்பது விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதன் காரணமாக தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி கிரிக்கெட் தரவரிசையிலும் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற உலக சாதனையும் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

வெறித்தனமான பவுலர்:
அதே போல இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடாத இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது போட்டியில் தமக்கு கிடைத்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்டார். இந்நிலையில் 41 வயதை தாண்டியும் ஃபிளாட்டான பிட்ச்சில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னை மகத்தான பவுலர் என்பதை நிரூபித்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார்.

அதை விட பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகளில் நம்ப முடியாத அளவுக்கு பந்து வீசிய இந்தியாவின் பும்ரா வெறித்தனமான பவுலர் என்றும் அவர் வித்தியாசமாக பாராட்டியுள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2வது போட்டியில் ஃபிளாட்டான பேட்டிங் பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய சாதகம் இல்லாத சூழ்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக செயல்பட்டார்”

- Advertisement -

“ஆனால் பும்ராவை பற்றி நீங்கள் என்ன சொல்வது? அவர் வெறித்தனமானவர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையில் அவர் நம்ப முடியாத வகையில் பந்து வீசினார். கண்டிப்பாக அவர் வெறித்தனமான பவுலர். ஜேம்ஸ் ஆண்டர்சன் போல நீங்கள் நீண்ட காலம் விளையாடும் போது மேடு பள்ளங்கள் வரலாம். அவர் சில காயங்களை சந்தித்தாலும் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடுவது அபாரமானதாகும்”

இதையும் படிங்க: பும்ரா மாதிரி இந்திய பவுலர்கள் உருவாக அவர் தான் காரணம்.. வெர்னோன் பிளாண்டர் பாராட்டு

“அந்த போட்டியில் அவர் தன்னுடைய கிளாஸ் மற்றும் திறமையை காண்பித்தார். இப்போது நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதற்கு அதிகமான உழைப்புடன் உடல் மற்றும் மனதளவிலான அழுத்தத்தை சமாளிப்பது முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறினார். இதை தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement