- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வார்னே, அக்ரம் மாதிரி திறமை கொண்ட பும்ரா சொன்னா அது அப்படியே கேட்குது.. ரவி சாஸ்திரி பாராட்டு

ஜஸ்ப்ரித் பும்ரா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்கேற்றி வருகிறார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தும் அவர் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அந்தத் தொடரில் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்த அவர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதை வென்றார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு முக்கிய நேரத்தில் முகமது ரிஸ்வானை போல்ட்டாக்கிய அவர் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

வார்னே போல:
அதே போல தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அபாரமாக பந்து வீசிய அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் வாசிம் அக்ரம், ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்களைப் போல தாம் சொல்வதை பந்து கேட்கும் அளவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமான திறமையை கொண்டிருப்பதாக இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“தம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதை பும்ரா உலகிற்கு காண்பித்துள்ளார். உங்கள் கேரியரில் பெரும்பாலான நேரங்களில் உங்களுடைய கையில் இருக்கும் பந்து இருக்கும் போது “இதை செய்தால் பந்து அதை செய்யும்” என்று சொல்ல முடியாது. 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தான் எம்மாதிரியான சேர்க்கையுடன் விளையாட வேண்டும் என்பதை வெற்றிக்காக போராடும் போது இந்தியா உணர்ந்தது”

- Advertisement -

“அப்போட்டியில் முகமது ரிஸ்வான் விக்கெட்டை பும்ரா எடுத்தது அற்புதமானது என்று சொல்வேன். அந்த விக்கெட் தான் போட்டியின் சமநிலையை மாற்றியது. அது புதிய ஸ்பெல்லின் முதல் பந்தில் விழுந்தது. அதே போல ஃபைனலில் மார்க்கோ யான்சன் விக்கெட்டை மும்பை எடுத்தது மிகவும் முக்கியமானது. அதற்கு முந்தைய ஓவரில் கிளாசின் விக்கெட்டை பாண்டியா எடுத்திருந்தாலும் பும்ரா வீசிய ஓவர் முக்கியமானது என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: அவரை 8வது இடத்தில் களமிறக்கி.. வெற்றியை விட்ட தவறை இனியாச்சும் கம்பீர் செய்யக்கூடாது.. ஆகாஷ் சோப்ரா

“உலகிலேயே சிலர் மட்டுமே போட்டியின் போக்கை மாற்றியுள்ளனர். அதை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வக்கார், யூனிஸ் வாசிம் அக்ரம் தங்களுடைய உச்சத்தில் செய்துள்ளனர். ஷேன் வார்னே கிட்டத்தட்ட பந்திடம் “தரையில் பட்டு லெக் ஸ்ட்ம்பை அடி” என்று சொல்வார். தங்களுடைய ஆட்டத்தின் மேலே இருப்பவர்கள் மட்டுமே அதைச் செய்யக்கூடிய திறமையை பெற்றிருப்பார்கள். அதை பும்ரா இந்த உலகக் கோப்பையில் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -