
மெல்போர்ன் நகரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த உதவியுடன் 474 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய இந்தியா மிகவும் போராடி 369 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி சதத்தை அடித்து 114, ஜெய்ஸ்வால் 82, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்து கை கொடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கமின்ஸ், லயன், போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 4வது நாள் முடிவில் 228-9 ரன்கள் எடுத்து மொத்தம் 333 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா கடைசி நாளில் வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக லபுஸ்ஷேன் 70, கேப்டன் கமின்ஸ் 41 ரன்கள் எடுத்தனர். களத்தில் லயன் 41*, போலண்ட் 10* ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு தொல்லையாக இருந்து வருகிறார்கள். மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகபட்சமாக 4* விக்கெட்டுகளை எடுத்து தன்னுடைய தரத்தை நிரூபித்து வருகிறார்.
இந்தப் போட்டியில் எடுத்த விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்ப்ரித் பும்ரா தன்னுடைய கேரியரில் மொத்தம் 44 போட்டிகளில் 202 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த 202 விக்கெட்டுகளை அவர் 19.52 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் மிகவும் சிறந்த சராசரியை கொண்ட வீரர் என்ற அற்புதமான உலக சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற உலக சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் மால்கோம் மார்சல், கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஜோயல் கர்னர் ஆகியோரை முந்தி பும்ரா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 19.52*
2. மால்கோம் மார்சல்: 20.94
3. ஜோயல் கார்னர்: 20.97
4. கர்ட்லி ஆம்ப்ரோஸ்: 20.99
இதையும் படிங்க: ஆஸி 99/6 டூ 228/9.. ரோஹித், ஜெய்ஸ்வால் சொதப்பல்.. கைநழுவும் வரலாறு காணாத வெற்றியை இந்தியா பறிக்குமா?
மேற்குறிப்பிட்ட 3 வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களும் 80, 90களில் உலகின் அத்தனை டாப் பேட்ஸ்மன்களுக்கும் சவாலை கொடுத்த சூறாவளி வேகப்பந்து வீச்சாளர்களாக அறியப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மகத்தான அந்த மூவரையும் மிஞ்சும் அளவுக்கு தற்போது பும்ரா செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டின் மகத்துவம் நிறைந்த வீரராக செயல்படுவதாலேயே ஐசிசி தரவரிசையிலும் பும்ரா நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.