ஆஸி 99/6 டூ 228/9.. ரோஹித், ஜெய்ஸ்வால் சொதப்பல்.. கைநழுவும் வரலாறு காணாத வெற்றியை இந்தியா பறிக்குமா?

IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 221-7 என தடுமாறிய இந்தியாவை வாஷிங்டன் சுந்தர் – நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள்.

- Advertisement -

நல்ல பவுலிங்:

அதில் வாசிங்டன் சுந்தர் 50 ரன்களும் நித்திஷ் ரெட்டி தனது முதல் சதத்தை அடித்து 114 ரன்களும் குவித்தனர். அதனால் ஓரளவு தப்பிய இந்தியா 369 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கமின்ஸ் 3, போலண்ட் 3, லயன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சாம் கோன்ஸ்டஸை 8 ரன்களில் பும்ரா க்ளீன் போல்டாக்கினார்.

மறுபுறம் நங்கூரமாக விளையாடிய உஸ்மான் கவாஜாவை 21 ரன்களில் போல்ட்டாக்கிய சிராஜ் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தையும் 13 ரன்களில் காலி செய்தார். அடுத்ததாக வந்த தொல்லை நாயகன் டிராவிஸ் ஹெட்டை 1 ரன்னில் காலி செய்த பும்ரா அதற்கடுத்ததாக வந்த மார்ஷை டக் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அலெக்ஸ் கேரியை 2 ரன்னில் போல்ட்டாக்கி மிரட்டினார்.

- Advertisement -

வரலாற்றை மாற்றுமா இந்தியா:

ஆனால் மறுபுறம் லபுஸ்ஷேன் நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்த போது சிராஜ் 70 ரன்களில் அவுட்டாக்கினார். அவருக்குப்பின் பெரிய சவாலை கொடுத்த கேப்டன் கமின்ஸை 41 ரன்களில் ஜடேஜா காலி செய்தார். இறுதியில் டெயில் எண்டர்கள் லயன் 41*, போலண்ட் 10* ரன்கள் எடுத்த உதவியுடன் 4வது நாள் முடிவில் 228-9 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா மொத்தம் 333 ரன்கள் முன்னிலையாக பெற்றுள்ளது.

குறிப்பாக பும்ரா, சிராஜ் மிரட்டலாக பந்து வீசியதால் 99/6 என தடுமாறிய ஆஸ்திரேலியா தற்போது பெரிய இலக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு மீண்டு வந்துள்ளது. அதற்கு மீண்டும் ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் முக்கிய காரணமானது. அதே போல லபுஸ்ஷேன் உட்பட ஜெய்ஸ்வால் 3 கேட்ச்களை விட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

இதையும் படிங்க: “மச்சக்காரன் யா நீ” உன்னை மாதிரி அதிர்ஷ்டசாலியை பாத்தது இல்ல.. லாபுஷேனை கலாய்த்த – ஜஸ்ப்ரீத் பும்ரா

வரலாற்றில் மெல்போர்ன் மைதானத்தில் 332 ரன்கள் மட்டுமே வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட இலக்காகும். ஆனால் இப்போதே ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 5வது நாளில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கும். அதனால் கிட்டத்தட்ட வெற்றி கைநழுவியுள்ள இந்தப் போட்டியில் சேசிங் செய்து இந்தியா வரலாறு காணாத வெற்றியை பெருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement