“மச்சக்காரன் யா நீ” உன்னை மாதிரி அதிர்ஷ்டசாலியை பாத்தது இல்ல.. லாபுஷேனை கலாய்த்த – ஜஸ்ப்ரீத் பும்ரா

Marnus
- Advertisement -

மெல்போன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியின் நான்காம் நாளான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து 105 ரன்கள் முன்னிலையுடன் :

மார்னஸ் லாபுஷேனை கலாய்த்த பும்ரா :

தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபுஷேன் ஆகியோருக்கு இடையேயான ஒரு நகைச்சுவையான உரையாடல் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லாபுஷேனுக்கு இந்திய வீரர்கள் மூன்று முறை கேட்ச் வாய்ப்பை தவறவிட்டனர். அதன் உதவியில் அரைசதம் கடந்த அவர் முகமது சிராஜ் பந்துவீச்சில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அவர் மிகச் சிறப்பாக விளையாடியதற்கு அவருக்கு தவறவிடப்பட்ட வாய்ப்புகளே காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு கட்டத்தின் போது தொடர்ச்சியாக விக்கெட் வாய்ப்பிலிருந்து தப்பிக் கொண்டிருந்த லாபுஷேன் பும்ரா ஓவரிலும் ஒரு முறை எட்ஜ்ஜாகி கேட்ச் வாய்ப்பிலிருந்து தப்பினார். அப்போது ஜஸ்ப்ரீத் பும்ரா மார்னஸ் லாபுஷேனை பார்த்து : “உன்னைப் போன்ற ஒரு அதிர்ஷ்டம் உள்ள பேட்ஸ்மேனை, என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது” மீண்டும் ஒருமுறை தப்பித்திருக்கிறாய் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : “பாக்சிங் டே” போட்டியில் சதமடித்த நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திரா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள பரிசு – விவரம் இதோ

அவரது இந்த வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வெளியாகியிருந்தன. எப்போதுமே சீண்டலும் மோதிலுமாக இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் இன்று லாபுஷேனை கலாய்க்கும் விதமாக பும்ரா பேசியிருந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement