“பாக்சிங் டே” போட்டியில் சதமடித்த நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திரா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள பரிசு – விவரம் இதோ

Nitish
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி முதல் இன்னிங்சில் அதிரடியான சதம் விளாசி இந்திய அணியை ஓரளவு நல்ல ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார்.

நிதீஷ் ரெட்டிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை :

ஒரு கட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 221 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் எட்டாவது விக்கெட் வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியில் பாலோ ஆனிலிருந்து காப்பாற்றினார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணிக்கு இணையான ரன் குவிப்பை வழங்க முடியவிலை என்றாலும் ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றிருந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 189 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 114 ரன்கள் குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார்.

அவரது இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதோடு ஆஸ்திரேலிய மண்ணில் இளம் வயதில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் மற்றும் எட்டாவது இடத்தில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு இந்திய அணியை மீட்டெடுத்த நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் சார்பிலும் ஒரு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அடக்கத்தை சீண்டிய 19 ஆஸி வீரரை முதல் சவாலிலேயே தெறிக்க விட்ட பும்ரா.. ஆஸியை திருப்பி அடிக்கும் இந்தியா?

அந்த வகையில் முக்கியமான தருணத்தில் இந்திய அணி போராடிய வேளையில் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி முதல் சதத்தை பதிவு செய்த நிதீஷ் ரெட்டிக்காக 25 லட்ச ரூபாயை பரிசுத்தொகையாக வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement