அடக்கத்தை சீண்டிய 19 ஆஸி வீரரை முதல் சவாலிலேயே தெறிக்க விட்ட பும்ரா.. ஆஸியை திருப்பி அடிக்கும் இந்தியா?

- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த உதவியுடன் 474 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய இந்திய அணி மிகவும் போராடி 359 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்த போதிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இதர வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 229-7 என தடுமாறிய இந்திய அணியை நிதிஷ் ரெட்டி சதத்தை அடித்து 114, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் குவித்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கமின்ஸ் 3, போலண்ட் 3, லயன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

சீண்டிய 19 வயது வீரர்:

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சாம் கோன்ஸ்டஸை 8 (18) ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். 19 வயதாகும் அவர் இப்போட்டியில் அறிமுகமாகி முதல் இன்னிங்ஸில் 60 (65) ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து அவர் சிக்சர் அடித்தார்.

அத்துடன் ஒரே ஓவரில் 18 ரன்கள் அடித்த அவர் பும்ராவுக்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்தார். அப்போது மைதானத்தில் உள்ள ரசிகர்களை தமக்கு சாதகமாக பும்ராவுக்கு எதிராக கூச்சலிடுமாறு கோன்ஸ்டஸ் தட்டி எழுப்பினார். மறுபுறம் பும்ரா வழக்கம் போல சிறிய புன்னகையுடன் அடக்கமாக அமைதியுடன் சென்றார்.

- Advertisement -

மாஸ் பதிலடி:

இருப்பினும் அன்றைய நாளின் முடிவில் 2வது இன்னிங்ஸில் மீண்டும் பும்ராவை டார்கெட் செய்து அடிக்க வருவேன் என்று கோன்ஸ்டஸ் சவால் விட்டார். ஆனால் இப்போட்டி முடிவதற்குள் அவரை போல்டாக்கிய பும்ரா அடக்கமாக சென்ற தன்னை சீண்டிய கோன்ஸ்டஸ்க்கு அதே போல ரசிகர்களை தட்டி எழுப்பி மாஸ் பதிலடி கொடுத்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கவாஜா 13, ஸ்மித் 13, ஹெட் 1, மார்ஷ் 0, அலெக்ஸ் கேரி 2 ரன்களில் பும்ரா, சிராஜ் வேகத்தில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: பாவங்க பும்ரா.. இதான் கடைசியா இருக்கனும்.. தகுதியான நிதிஷை வெச்சு இந்திய அணியை மாத்துங்க.. சாஸ்திரி அட்வைஸ்

அதே போல மறுபுறம் 70 ரன்கள் விளாசி சவாலை கொடுத்த லபுஸ்ஷேனை தக்க சமயத்தில் சிராஜ் அவுட்டாக்கினார். கேப்டன் கமின்ஸ் 41 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அதனால் இந்த பதிவிடும் போது ஆஸ்திரேலியா 182-9 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியா 300 ரன்கள் இலக்கை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்பில் ஆஸ்திரேலியாவை திருப்பி அடித்து இந்தியா வெல்லுமா என்ற காத்திருப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement