மொத்த ஜாம்பவான்களையும் முந்திய பும்ரா.. நூற்றாண்டின் ஆசிய நாயகனாக 146 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை

Jasprit Bumrah 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் இந்தியா வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. எனவே பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் அந்த அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா முதலில் பேட்டிங் செய்து போராடி 396 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் யாருமே 35 ரன்கள் கூட தாண்டாத நாளில் அதிகபட்சமாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் தனி ஒருவனாக இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து காப்பாற்றினார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், ரீகன் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

நாயகன் பும்ரா:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்ராலி 76, கேப்டன் பென்ஸ் ஸ்டோர் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 28/0 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது இங்கிலாந்தை விட 171 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியா வெற்றிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியின் பிட்ச் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஸ்பின்னர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அளவுக்கு ஃபிளாட்டாக இருந்தது. ஆனால் அதிலும் ஓலி போப், பென் ஸ்டோக்ஸ் போன்ற தரமான வீரர்களின் ஸ்டம்புகளை தெறிக்க விட்ட பும்ரா 6 விக்கெட்களை எடுத்து மிரட்டினார்.

- Advertisement -

அதையும் சேர்த்து இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 152* விக்கெட்டுகளை 20.29 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக கடந்த 146 வருடங்களாக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தது 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் சிறந்த சராசரியை கொண்ட ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சிட்னி பேர்ன்ஸ் (ஆஸ்திரேலியா) : 16.43
2. ஆலன் டேவிட்சன் (ஆஸ்திரேலியா) : 20.53
3. மால்கம் மார்சல் (வெஸ்ட் இண்டீஸ்) : 20.95
4. ஜோயல் கார்னர் (வெஸ்ட் இண்டீஸ்) : 20.97
5. கார்ட்லி ஆம்ப்ரோஸ் (வெஸ்ட் இண்டீஸ்) : 20.99

இதையும் படிங்க: அவங்க இருக்கப்ப எதுக்கு பயம்? நாம செஞ்ச தப்புக்காக இப்போ அனுபவிக்கிறோம்.. பிசிசிஐக்கு கங்குலி கோரிக்கை

அந்த வகையில் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் மகத்தான நாயகன் பவுலராக பும்ரா ஜொலித்து வருகிறார் என்றே சொல்லலாம். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் இப்போட்டியில் படைத்தார்.

Advertisement