டி20 தரவரிசையில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பும்ரா. அதுக்குன்னு இப்படியா? – நம்பவே மாட்டீங்க

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2016-வது ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தான் அறிமுகமான காலத்தில் இருந்தே தனது மிகச் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இன்று வரை முன்னணி வீரராக திகழ்ந்துவரும் பும்ரா மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலராக பார்க்கப்படும் பும்ரா சமீப காலமாகவே இந்திய அணியின் டி20 போட்டிகளில் பெரும்பாலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.

Jasprit Bumrah

- Advertisement -

அதோடு அவர் விளையாடிய ஒரு சில போட்டிகளிலும் அவர் விக்கெட் வீழ்த்தாததால் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பவுலர்களின் தரவரிசை பட்டியலில் அவரது ரேங்க் பெரிய அளவில் சறுக்களை சந்தித்துள்ளது. பொதுவாகவே குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வகையான வடிவத்திலும் சிறந்து விளங்கும் வீரர்களின் பட்டியலை கொண்டு ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள t20 கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பும்ரா மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் இருக்கும் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

IND vs ENG Jasprit Bumrah

இப்படி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-ல் இடம் பெற்றிருக்கும் பும்ரா டி20 கிரிக்கெட்டில் டாப் 10 இல் மட்டும் இல்லாமல் 30 இடங்கள் பின் தங்கிய நிலையில் 33-வது இடத்தை பிடித்து எங்கேயோ பின் தள்ளப்பட்டுள்ளார். பும்ராவின் இந்த தரவரிசையை கவனித்த ரசிகர்கள் அவருக்கு என்னதான் ஆனது? என்று வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இன்றளவும் உலகின் முதல்நிலை பந்துவீச்சாளராக பார்க்கப்படும் பும்ரா சமீப காலமாகவே நிறைய போட்டிகளில் பங்கேற்பதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் வெகுவிரைவில் இவரால் நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இதையும் படிங்க : யார் இந்த குல்தீப் சென்? இந்திய அணியின் நெட் பவுலராக தேர்வுசெய்யப்பட என்ன காரணம் – விவரம் இதோ

இன்னும் ஒரு சில மாதங்களில் t20 உலக கோப்பை வரவிருக்கும் வேளையில் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. இது அவருக்கு மேலும் சறுக்கலை ஏற்படுத்தலாம். இருப்பினும் டி20 உலக கோப்பையின் போது முழுஉடற் தகுதியுடன் மீண்டு வந்து அசத்துவார் என்பது உறுதி.

Advertisement