நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது.
மலிங்காவின் சாதனையை முறியடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா :
பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த இறுதி போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் பும்ரா எடுத்த நான்கு விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லாசித் மலிங்காவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து முதலிடத்திற்கு சென்றுள்ளார். அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் பும்ரா சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : விராட் கோலி, பும்ராவை தொடர்ந்து 3 ஆவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் பெற்ற கவுரவம் – விவரம் இதோ
இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து விச்சாளராக லாசித் மலிங்கா 38 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த வேளையில் அவரை முறியடித்த பும்ரா நேற்று எடுத்த 4 விக்கெட்டுகளுடன் சேர்த்து டி20 உலக கோப்பை போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 உலககோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளார்.



