விராட் கோலி, பும்ராவை தொடர்ந்து 3 ஆவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் பெற்ற கவுரவம் – விவரம் இதோ

Samson
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வந்த ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

3 ஆவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை :

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்த வீரராக துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 89 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி 255 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

பின்னர் நியூசிலாந்து அணியை 159 ரன்களில் தடுத்து நிறுத்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த தொடரில் வெறும் 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய அவர் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 321 ரன்கள் குவித்து இந்திய அணி சார்பாக இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் அவர் பெற்ற இந்த தொடர்நாயகன் விருதின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை வெற்றியின் மூலம் இந்திய அணி நிகழ்த்திய இரட்டை சாதனை – விவரம் இதோ

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருதினை வென்ற இந்திய வீரர்களாக விராட் கோலி (2014, 2016) மற்றும் பும்ரா (2024) ஆகியோர் மட்டுமே இருந்த வேளையில் மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருதினை வென்று அவர்களது சாதனை பட்டியலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement