இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி நிகழ்த்திய இரட்டை சாதனை :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பினை வழங்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்தது.
இதன் காரணமாக இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. இவ்வேளையில் இந்திய அணி இந்த 2026 டி20 உலக கோப்பையை வென்றதன் மூலம் இரட்டை சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதுவரை இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு முறை டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளாக முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அதிகமுறை டி20 சாம்பியனான அணியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : என்மேல எனக்கே டவுட் இருந்துச்சி.. ஆனா அவங்க 2 பேரும் நம்பிக்கை வச்சிருந்தாங்க – அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி
அதோடு இரண்டாவது சாதனையாக இதுவரை ஐசிசி நடத்திய டி20 உலக கோப்பை தொடரில் தொடரை நடத்திய நாடு சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்த வேளையில் இம்முறை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இந்த டி20 உலக கோப்பையை நடத்திய நிலையில் இந்த தொடரை நடத்திய இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்று இரண்டாவது சாதனையும் நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



