வெறும் 14 ரன்ஸ் 3 விக்கெட்ஸ்.. போராடிய சுதர்சன்.. மலிங்காவின் சாதனையை உடைத்து மாஸ் கம்பேக் கொடுத்த பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் மும்பைக்காக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா தன்னுடைய முன்னாள் அணியான குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த சஹா 19 (15) ரன்களில் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார். அதே போல புதிய கேப்டன் சுப்மன் கில் 31 (22) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றும் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார். இருப்பினும் அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

பும்ராவின் சாதனை கம்பேக்:
அவருடன் கை கொடுக்க முயற்சித்த அசமத்துல்லா ஓமர்சாய் 17 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த டேவிட் மில்லர் நிதானமாக விளையாடி குஜராத்தை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அவரை 16வது ஓவரின் முதல் பந்திலேயே 11 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா மறுபுறம் நிதானமாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சனையும் 45 (38) ரன்களில் திலக் வர்மாவின் அற்புதமான கேட்ச்சால் காலி செய்தார்.

அடுத்து வந்த ராகுல் திவாடியாவும் அதிரடியாக விளையாடி 22 (15) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ரசித் கான் 4, விஜய் சங்கர் 6* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் போராடி 168/6 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3, ஜெரால்டு கோட்சி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து துல்லியமாக பந்து வீசி குஜராத்தை கட்டுப்படுத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த வருடம் காயத்தால் ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர் இந்த வருடம் முழுமையாக குணமடைந்து களமிறங்கிய முதல் போட்டியிலேயே 3.50 எக்கனாமியில் பந்து வீசி அபாரமான கம்பேக் கொடுத்தார். அத்துடன் இப்போட்டியையும் சேர்ந்த்து கேரியரில் 20வது முறையாக 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.

இதையும் படிங்க: கோலிக்கு ஒரு நியாயம்.. எங்க பிளேயருக்கு ஒரு நியாயமா? ஐபிஎல் நிர்வாகத்தை விளாசும் கொல்கத்தா ரசிகர்கள்

இதற்கு முன் லசித் மலிங்கா மற்றும் சஹால் ஆகியோர் தலா 19 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் பும்ரா மீண்டும் அசத்தலான கம்பேக் கொடுத்தது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 169 என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி சேசிங் செய்து வருகிறது.

Advertisement