தெ.ஆ மண்ணில் சச்சின் போன்ற யாரும் செய்யாத.. வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பும்ரா

Jasprit Bumrah 3
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை முதல் முறையாக வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு சுருட்டி மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் முன்னேறி அசத்தியுள்ளது.

- Advertisement -

தனித்துவமான பும்ரா:
இந்த வெற்றியை பெறுவதற்கு முதல் இன்னிங்கில் 6 விக்கெட்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு நிகராக 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 12 விக்கெட்களை எடுத்து தொடர் முழுவதும் அசத்தினார்.

அதன் காரணமாக தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்ற அவர் சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் நாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் முதல் விராட் கோலி வரை தென்னாபிரிக்காவில் வேறு எந்த இந்திய வீரரும் ஒரு டெஸ்ட் தொடரின் தொடர்நாயகன் விருதை வென்றதில்லை.

- Advertisement -

இது போக சேனா நாடுகள் எனப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சவாலான வெளிநாடுகளில் அதிக முறை தொடர்நாயகன் விருதுகளை வென்ற 2வது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் ஆல் டைம் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ராகுல் டிராவிட் : 3
2. கபில் தேவ்/ஜஸ்பிரித் பும்ரா : தலா 2
3. சச்சின் டெண்டுல்கர்/முகமது அசாருதீன்/கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்/திலிப் வெங்சர்க்கார்/சௌரவ் கங்குலி/ஜாகிர் கான்/புவனேஸ்வர் குமார்/விராட் கோலி/செட்டேஸ்வர் புஜாரா : தலா 1

இதையும் படிங்க: லெஜெண்ட் ஜஹீர் கானை சமன் செய்த பும்ரா.. வெளிநாட்டில் முதல் இந்தியராக அற்புதமான சாதனை

மேலும் 2வது போட்டியில் மொத்தமாக 86 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2வது இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. வெங்கடேஷ் பிரசாத் : 10/153 (1996)
2. ஜஸ்பிரித் பும்ரா : 8/86 (2024)*
3. ஸ்ரீசாந்த் : 8/99 (2006)
4. ஜகவல் ஸ்ரீநாத் : 8/104 (2001)

Advertisement