ஜஸ்பிரித் பும்ராவால் ஷாஹீன் அப்ரிடியை நெருங்க கூட முடியாது – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

Jasprit Bumrah Shaheen Afridi
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் காலம் காலமாக களத்திலும் களத்திற்கு வெளியேயும் கடுமையாக மோதிக்கொள்வது வழக்கமாகும். குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எப்போதும் இந்தியாவை விட நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று அடிக்கடி பேசுவதும் ஒப்பிடுவதும் சர்வ சாதாரணமாகும். இந்த நிலையில் நவீன கிரிக்கெட்டில் இந்த 2 அணிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தங்களது அணியின் வேகப்பந்து வீச்சு துறையின் முகமாக உருவெடுத்துள்ளார்கள் என்றே சொல்லலாம். இதில் 2018ஆம் ஆண்டு அறிமுகமான ஷாஹீன் அப்ரிடி தனது அபார திறமையால் குறுகிய காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி பாகிஸ்தானின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

shaheen afridi 2

- Advertisement -

குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடிக்க ஆட்டநாயக்கன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2021ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் வென்று அசத்தி வருகிறார். மேலும் 229 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் பவுலர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். மறுபுறம் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பும்ரா போட்டியின் அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்து வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படுகிறார்.

நெருங்க முடியாது:
குறிப்பாக 2018/19இல் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சரித்திரம் படைப்பதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இது வரை 319 விக்கெட்களை எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தற்சமயத்தில் அசத்தும் பவுலர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். சொல்லப்போனால் அனுபவம் மற்றும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில் அப்ரிடியை விட பும்ரா சிறந்தவராகவே செயல்பட்டு வருகிறார்.

மேலும் தற்சமயத்தில் இருவருமே காயமடைந்து அந்தந்த அணிகளுக்காக விளையாடாமல் இருந்து வருகிறார்கள். அவர்களது காயம் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்குமே வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடியை நெருங்கும் அளவுக்கு ஜஸ்பிரித் பும்ரா இதுவரை அசத்தவில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இடம் வகிக்கும் அவர் இது பற்றி உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷாஹீன் அப்ரிடி ஜஸ்பிரித் பும்ராவை விட பல மடங்கு அற்புதமான வீரர். ஷாஹீன் அப்ரிடி இருக்கும் அளவுக்கு பும்ராவால் கொஞ்சம் கூட நெருங்க முடியாது” என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் பும்ராவை அவர் இவ்வாறு விமர்சிப்பது இது முதல் முறையல்ல. ஏனெனில் ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு பும்ரா ஒரு குழந்தை என்றும் நான் மட்டும் இந்த சமயத்தில் விளையாடியிருந்தால் அவரை அடித்து நொறுக்கியிருப்பேன் என்றும் அப்துல் ரசாக் விமர்சித்தது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

Razzaq

அந்த சமயத்தில் பிரபல இணையத்தில் கொடுத்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் கிளன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மகத்தான பவுலர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். எனவே பும்ரா எனக்கு முன் ஒரு குழந்தை பவுலர் போன்றவர். அதனால் அவரை நான் எளிதாக அடித்து நொறுக்கியிருப்பேன்” என்று கூறினார். பொதுவாகவே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று பேசுவது வழக்கமான நிலையில் இவர் மீண்டும் பும்ராவை தரம் தாழ்த்தி பேசியுள்ளது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, இந்த பிட்ச்ல எப்படி ஜெயிக்க முடியும் – இப்போதே புலம்பும் கம்பீர், காரணம் என்ன

இருப்பினும் தரமான அந்த 2 பவுலர்களில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷாஹீன் அப்ரிடி அடுத்ததாக நடைபெறும் பிஎஸ்எல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பிப்ரவரியில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை அல்லது 2023 ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement