இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, இந்த பிட்ச்ல எப்படி ஜெயிக்க முடியும் – இப்போதே புலம்பும் கம்பீர், காரணம் என்ன

Lucknow Gautam Gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோல்வியை சந்தித்த இந்தியா நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கடுமையாக போராடி வென்றது. ஜனவரி 29ஆம் தேதியன்று லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

அதிகபட்சமாக மிட்சேல் சாட்னர் 19* (23) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்களை சாய்த்தார். அதை தொடர்ந்து 100 ரன்களை துரத்திய இந்தியாவும் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நியூசிலாந்தின் திறமையான பந்து வீச்சில் சுப்மன் கில் 11, இஷான் கிசான் 19, ராகுல் திரிபாதி 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதனால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடி சரவெடியாக ரன்களை குடிக்க முடியாமல் தடுமாறினார்.

கம்பீர் கவலை:
இடையே வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் அவுட்டானாலும் அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா 15* (20) ரன்களும் சூரியகுமார் யாதவ் 26* (31) ரன்களும் எடுத்ததால் தப்பிய இந்தியா 19.5 ஓவரில் 101/4 ரன்களை எடுத்து போராடி வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தங்களை அவ்வளவு எளிதில் சாய்க்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் 100 ரன்களை துரத்துவதற்கு இந்தியா 19.5 ஓவரை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு இரு அணிகளைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன்களும் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியாத அளவுக்கு உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் 360 டிகிரி பேட்ஸ்மேனாகவும் மிரட்டக்கூடிய சூரியகுமார் 100 ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டாத அளவுக்கு லக்னோ மைதானம் மிகப்பெரிய சவாலாக இருந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Lucknow-stadium

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் 2023 ஐபிஎல் தொடர் துவங்கும் நிலையில் இந்த மைதானத்தை தனது சொந்த மைதானமாக வைத்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி விளையாட உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இம்மைதானத்தின் பிட்ச் டி20 கிரிக்கெட்டுக்கு உகந்ததாக இல்லை என்று அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இப்போதே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி வர்ணனையாளராக செயல்படும் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த பிட்ச் டி20 கிரிக்கெட்டுக்கு உகந்ததாக அல்லாமல் சராசரியான தாரத்துக்கும் மிகவும் குறைவாக இருந்தது. அனைத்து நேரங்களிலும் இது போல் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிட்ச்சை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இது மிகவும் கடினமானது. மறுபுறம் 100 ரன்களை துரத்தும் போது சுழலுக்கு எதிராக விளையாடும் உங்களது திறமையும் ஸ்ட்ரைக்கை மாற்றும் திறமையும் வெளிப்படும். அப்படிப்பட்ட நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக தடுமாறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

Gambhir

“அவர்கள் இந்த அளவுக்கு போட்டியை ஆழமாக எடுத்துச் செல்லாமல் முன்கூட்டியே முடித்திருக்க வேண்டும். ஒருவேளை குவின்டன் டீ காக் இந்த பிட்ச்சை பார்த்தால் ஐபிஎல் தொடருக்கு விளையாடவே வரமாட்டார் என்று நினைக்கிறேன். இருப்பினும் லக்னோ அணிக்காக இம்முறை அமித் மிஸ்ரா அதிக பங்காற்றுவார் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

அதாவது இந்த மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாகவும் பேட்டிங்க்கு அதிக பாதகமாகவும் இருப்பது விரைவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு சவாலாக இருக்கும் என்று கௌதம் கம்பீர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் 3 ஹாட்ரிக் எடுத்து அனுபவம் மிகுந்த சுழல் பந்து வீச்சாளராக இருக்கும் அமித் மிஸ்ரா இந்த சூழ்நிலைகளில் அசத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Gambhir

இதையும் படிங்க:IND vs NZ : என்னோட விக்கெட்டை நான் தியாகம் செய்ய காரணமே இதுதான் – வாஷிங்டன் சுந்தர் வெளிப்படை

மொத்தத்தில் முதல் சீசனில் நாக் அவுட் சுற்றுடன் லக்னோ வெளியேறிய இம்முறை கோபி வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கும் அந்த அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் ஏற்கனவே தடவலாக செயல்பட்டு சுமாரான பார்மில் இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் அவரை வைத்துக் கொண்டு இந்த பிட்ச்சில் எப்படி வெல்ல போகிறோம் என்று கம்பீர் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement