என்னை ஏலம் எடுக்காதது அசிங்கமா இருக்கு. மத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் – இங்கிலாந்து வீரர் வருத்தம்

Roy

14வது ஐபிஎல் சீசனுக்கான ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் என இந்த இருவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருந்தது. குறிப்பாக பல அதிரடி பேட்ஸ்மேன்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனை பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலைக்கு தான் வாங்கியது. ஏலத்தில், தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ipl trophy

அதேபோன்று இந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியவர்கள் கோடிகளை அள்ளினார்கள். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜெய் ரிச்சர்ட்சன் 14 கோடிக்கும், நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இப்படி வேகப் பந்துவீச்சாளர்கள் என ஒரு பக்கம் கோடிகளில் புரள மற்றொரு பக்கம் அதிரடி பேட்ஸ்மேன்களான ஜேசன் ராய், ஆரோன் பின்ச், காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், மார்ட்டின் கப்தில் போன்ற திறமையான பேட்ஸ்மேன்களை எந்த அணியும் திரும்பி கூட பார்க்கவில்லை. ஐபிஎல் அணிகளில் அனைத்து அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் அதிகளவு இருப்பதால் அதிரடி பேட்ஸ்மேன்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தன்னைப் புறக்கணித்து இதுகுறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில் : ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போனது பெரிய அசிங்கம் தான் ஏலம் எடுக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

- Advertisement -

இந்த தொடரில் மேட்ச் வின்னர்கள் அதிகமாக இருப்பதால் இந்த தொடர் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் தொடரானது ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.