IND vs WI : கே.எல் ராகுலை தொடர்ந்து நட்சத்திர ஆல்ரவுண்டருக்கு கொரோனா உறுதி – வெளியான தகவல்

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று ட்ரினிடாட் நகரில் துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது மட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வேளையில் தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலை செய்ய முனைப்பு காட்டும் என்பதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது போட்டியும் முக்கியம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த கே.எல் ராகுலுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக இந்த தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது நாம் அறிந்ததே. அந்த வகையில் கே.எல் ராகுலை தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

holder 2

இதனை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பின் காரணமாகவே ஜேசன் ஹோல்டர் முதல் ஒரு நாள் போட்டியில் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் அவரது அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக பயன்படும் என்பதனால் அவர் இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜேசன் ஹோல்டர் முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஏற்பட்ட கொரோனா காரணமாக அந்த போட்டியை தவறவிட்டார்.

இதையும் படிங்க : இதை செய்தால் டெஸ்ட் உட்பட மொத்த கிரிக்கெட்டும் இன்னும் பிரபலமாகும் – இந்திய ஜாம்பவான் புதிய ஆலோசனை

அதேபோன்று இனிவரும் இரண்டு போட்டியிலும் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த சரியான தகவல் கிடைக்கவில்லை என்றாலும் அவர் இந்த தொடரில் கொரோனா பாதிப்பு காரணமாக விளையாட முடியாது என்றே பரவலான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement