தொடர் தோல்வி எதிரொலி : அணியில் சேர்க்கப்பட்ட மிரட்டலான ஆல்ரவுண்டர் – இப்போவாச்சும் சேத்தீங்களே

Holder
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி துவங்கிய உலக கோப்பை டி20 தொடரானது தகுதிச்சுற்று போட்டிகளை கடந்து தற்போது சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சுற்றின் முடிவில் இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த தொடர் முழுவதுமே மோசமான தொடராக அமைந்துள்ளது. ஏனெனில் பயிற்சி போட்டியின் போது அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது சூப்பர் 12-சுற்றில் அசத்தலாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

wivseng

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி பொதுவாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சுமாராகவே விளையாடினாலும் டி20 மேட்ச் வின்னர்களை கொண்ட இந்த அணி நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் எளிதாக மற்ற அணிகளை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக அவர்கள் முதலாவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 14.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே குவித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.

இப்படி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது அந்த குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று அணிகளான வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு இடையே மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படி 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று நல்ல ரன்ரேட் வைத்திருந்தால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Holder 1

இந்நிலையில் தற்போது அந்த அணியின் முன்னாள் கேப்டனான ஜேசன் ஹோல்டர் 15 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலக கோப்பை தொடரின் ரிசர்வ் வீரராக இடம் பெற்றிருந்த ஜேசன் ஹோல்டர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பட்டையை கிளப்ப கூடியவர் அதுமட்டுமின்றி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக சில ஆண்டுகாலம் செயல்பட்டு வந்த இவர் நிச்சயம் இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வலு சேர்ப்பார் என்பது காரணமாக மீதி உள்ள போட்டிகளில் ஜேசன் ஹோல்டரை அந்நாட்டு நிர்வாகம் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsNZ : முக்கியமான இந்த போட்டியில் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் விலக வாய்ப்பு – அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அவருக்கு பதிலாக மெக்காய் ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு போட்டிகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிச்சயம் இந்த மூன்று போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினால் அவர்களுக்கு கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 7 டி20 உலக கோப்பை தொடரில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement