4 பந்துகளில் 4 விக்கெட்கள் – ஹாட்ரிக் சாதனை மட்டுமின்றி வரலாற்றில் இடம்பிடித்த – ஜேசன் ஹோல்டர்

Holder
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் முதலில் நடைபெற்று முடிந்த முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் இந்த தொடர் 2 – 2 என சமனில் இருந்தது. இதை அடுத்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

wivseng

180 ரன்கள் இலக்கு :
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் 34 ரன்களும் மற்றும் கைல் மேயர்ஸ் 31 ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த செபார்ட் 6 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 21 ரன்களிலும் அவுட்டானார்கள்.

- Advertisement -

இதனால் 105/4 என தடுமாறிய அந்த அணியை கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் 25 பந்துகளில் 41* ரன்களும் ரோமன் போவெல் 17 பந்துகளில் 35* ரன்களும் எடுத்து அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179/4 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

holder 3

போராடிய இங்கிலாந்து :
இதை அடுத்து 180 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 8, டாம் பாண்டன் 16 என சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இங்கிலாந்தை வெற்றி நோக்கி அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அடுத்து வந்த மிடில் ஆர்டர் வீரர்களில் கேப்டன் மொய்ன் அலி 14 ரன்கள், லிவிங்ஸ்டன் 6 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

- Advertisement -

கடைசி நேரத்தில் போராடிய சாம் பில்லிங்ஸ் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்காக போராடினார். அப்போது கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் வீசினார்.

Holder 1

மிரட்டிய ஜேசன் ஹோல்டர்:
முதல் பந்தில் நோ பால் உடன் அந்த ஓவரை துவங்கிய அவர் வீசிய 2வது பந்தில் கிறிஸ் ஜோர்டன் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானர். 3வது பந்தில் 41 ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த சாம் பில்லிங்ஸ்சும் சிக்ஸர் அடிக்க போய் தனது விக்கெட்டை இழந்தார். அதற்கு அடுத்த பந்தை சந்திக்க வந்த அடில் ரஷித் தன் பங்கிற்கு சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்ததால் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்த ஜேசன் ஹோல்டர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் கடைசி பேட்டர் சக்கிப் மஹ்மூத்தை போல்டாக்கிய ஜேசன் ஹோல்டர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து தனது அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற செய்தார்.

holder 2

இதனால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த த்ரில் வெற்றியின் வாயிலாக 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3 – 2 என்ற கணக்கில் வென்ற வெஸ்ட்இண்டீஸ் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

ஜேசன் ஹோல்டர் சாதனை:
இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ஜேசன் ஹோல்டர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் என்ற சரித்திர சாதனை படைத்தார். அதேபோல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் எழுதினார்.

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு செல்லப்போகும் இந்திய பவுலர் இவர்தான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்த 4வது பவுலர் என்ற பெருமையை இலங்கையின் லசித் மலிங்கா, ஆப்கானிஸ்தானின் ரசித் கான், நெதர்லாந்தின் கர்டிஸ் கெம்பர் ஆகியோருக்கு பின் பெற்றார்.

இப்போட்டியில் வெறும் 2.5 ஓவர்களை வீசிய ஜேசன் ஹோல்டர் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். அத்துடன் இந்த தொடரில் அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக “சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பை லேட்ரல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்” என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement