இந்த ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு செல்லப்போகும் இந்திய பவுலர் இவர்தான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்று அதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர். ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து அவர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கும் வேளையில் அதனை தொடர்ந்து தற்போது மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

Auction

- Advertisement -

இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போகும் இந்திய பவுலர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் விளையாடும் பல பவுலர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போவார்கள் என்றாலும் இதில் முதன்மையாக தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று தோன்றுகிறது.

ஏனெனில் தீபக் சாகர் புதிய பந்தில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுடையவர். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களில் இல்லாத அளவிற்கு அவரிடம் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறமை இருக்கிறது. இதன் காரணமாக நிச்சயம் தீபக் சாஹர் இந்த ஏலத்தில் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போவார். எப்போதுமே ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை துவக்க ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தும் பவுலர் இருந்தால் நிச்சயம் எதிரணியின் முதுகெலும்பை துவக்கத்திலேயே முறித்துவிட முடியும்.

Deepak

அந்த வகையில் தீபக் சாஹர் எதிரணியின் முதுகெலும்பை முறிக்க கூடியவர் என்பதனால் அவர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தீபக் சாஹரால் முதல் 3 ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் அதோடு பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தால் நிச்சயம் அணிக்கும் அது அனுகூலமாக அமையும் என்பதனால் அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : 2 நகரங்களில் மட்டுமே நடைபெறும் ஐ.பி.எல்! ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? – விவரம் இதோ

அதே போன்று புதிதாக ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் என்று கூறியுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேல், ஷர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார் போன்ற பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் தாண்டி தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement