இந்தியாவ ஒன்னும் பண்ண முடியாது, பேசமா வீட்லயே இருங்க – கேப்டன் பட் கமின்ஸ்க்கு முன்னாள் ஆஸி வீரர் கோரிக்கை

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடைசியாக கடந்த 2014/15 ஆம் ஆண்டு இத்தொடரை வென்றிருந்த அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த ஊரில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்த அந்த அணி வாயில் பேசியதை செயலில் காட்டாமல் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

அதை விட சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் ஸ்வீப் ஷாட் அடித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்ட்டானதை பார்த்த முன்னாள் வீரர்கள் பிட்ச் மீது தவறில்லை என்பதை புரிந்து கொண்டு தங்களது அணியினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மொத்தத்தில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் நம்பர் ஒன் அணி என்பதற்கு அடையாளமாக செயல்படாத ஆஸ்திரேலியா இத்தொடரில் 4 – 0 (4) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திப்பது உறுதியாகி விட்டதாகவே நம்பப்படுகிறது.

கில்லஸ்ப்பி அட்வைஸ்:
ஏனெனில் ஏற்கனவே தடுமாறும் அந்த அணியில் டேவிட் வார்னர் உள்ளிட்ட ஒரு சில முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையில் கேப்டன் பட் கமின்ஸ் 2வது போட்டியை முடித்துக்கொண்டு உடல்நிலை சரியில்லாத தனது குடும்பத்தை பார்ப்பதற்காக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் 3வது போட்டிக்கு முன் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் குடும்பத்தில் மோசமான சூழ்நிலை இருப்பதால் இந்தியா திரும்புவதில் தாமதமாகும் என்று தெரிய வந்தது. அதனால் 3வது போட்டியில் இருந்து விலகிய அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழி நடத்த உள்ளார்.

Pat-Cummins

இந்நிலையில் ஏற்கனவே 2 – 0 என்ற கணக்கில் இத்தொடரை இழந்து விட்டதால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்ப்பி 4வது போட்டியையும் தவிர்த்து விட்டு பேசாமல் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையாவது பார்த்துக் கொள்ளுமாறு பட் கமின்ஸ்க்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பட் கமின்ஸை இந்த சுற்றுப்பயணத்தில் மீண்டும் பார்க்காமல் போனால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். ஒருவேளை நான் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பொறுப்பில் இருந்தால் ஏற்கனவே இந்த தொடரை இழந்து விட்ட நிலையில் கோப்பையை வெல்ல முடியாது என்ற காரணத்தால் பேசாமல் வீட்டிலேயே இருங்கள் என்று அவருக்கு அறிவுரை சொல்வேன்”

- Advertisement -

“ஏனெனில் இந்த வருடத்தில் இதைவிட முக்கியமான ஆஷஸ் தொடர் வரும் நிலையில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட இது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக உடல்நிலை சரியில்லாத உங்களது அம்மா மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் இருப்பது முக்கியமா? அல்லது ஏற்கனவே இழந்த தொடரில் 4வது போட்டியில் விளையாடுவது முக்கியமா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். மேலும் ஏற்கனவே அவர் 3வது டெஸ்ட்டை தவற விட்டுள்ளதால் இந்த முடிவு முட்டாள்தனமானதாக இருக்காது”

Gillespie

“என்னை கேட்டால் ஏற்கனவே பின்புலத்தில் நீங்கள் இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் இனிமேலும் தேவையில்லை என்று பட் கமின்ஸிடம் ஆஸ்திரேலிய அணியினர் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த சமயத்தில் உங்களது மகன், சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் இருங்கள். உங்களது குடும்பம் தான் உங்களுடைய முதல் முக்கியத்துவமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:டெஸ்ட் போட்டியை நெனச்சா கஷ்டமா இருக்கு. விமானத்தில் சக பயணியிடம் பேசிய அஷ்வின் – சுவாரசிய தகவல்

அவர் கூறுவது போல இத்தொடரில் சுமாராக செயல்பட்ட பட் கமின்ஸ் நம்பர் ஒன் பவுலர் என்ற அந்தஸ்தை இழந்த நிலையில் குறைந்தபட்சம் குடும்பத்தினருடன் இருப்பது நல்ல முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement