டெஸ்ட் போட்டியை நெனச்சா கஷ்டமா இருக்கு. விமானத்தில் சக பயணியிடம் பேசிய அஷ்வின் – சுவாரசிய தகவல்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது 2 போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களும் இன்னும் நடைபெற இருக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களும் மூன்று நாட்களுக்குள்ளே முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான செயல்பாடு அவர்கள் மீது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை சமாளிக்க ஆஸ்திரேலியா வீரர்கள் நிறையவே திணறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து விமானத்தில் சக பயணி ஒருவரிடம் பேசிய சுவாரஸ்யமான விடயத்தை தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதன்படி அதில் பேசிய அஸ்வின் கூறுகையில் : விமானத்தில் பயணம் செய்த போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னிடம் என்னப்பா டெஸ்ட் போட்டியை மூன்று நாட்களிலேயே முடித்து விட்டீர்கள்.

IND vs AUS Siraj SMith

தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டை நினைத்தாலே எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறினாராம். அதற்கு பதிலளித்த அஸ்வின் அவரிடம் : ஐயா இரண்டு விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். ஒன்று கிரிக்கெட் வீரர்களின் மனநிலை இப்போது எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு தகுந்தவாறு இல்லாமல் வேறு மாதிரி மாறிவிட்டது.

- Advertisement -

ஏனென்றால் தற்போதெல்லாம் வீரர்கள் வேகமாக ரன்களை குவித்து விளையாட விரும்புகிறார்கள். அவர்களுக்கு விரைவாக ரன்கள் வரவேண்டும் என விரும்புகிறார்கள். மற்றொன்று இது மூன்று நாட்களில் முடியக்கூடிய போட்டியல்ல. விக்கெட்டுகளை விட்டுக் கொடுமை அளவுக்கு மைதானமும் மோசமானது கிடையாது. நிலைத்து நின்று ஆடியிருந்தாலே அவர்கள் ரன் எடுத்திருக்கலாம் என்று சொன்னேன் என அஸ்வின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு துணை கேப்டனே வேணாம், கே.எல் ராகுலை நீக்கிட்டு அவருக்கு சான்ஸ் கொடுங்க – ரவி சாஸ்திரி கருத்து

அதுமட்டும் இன்றி நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு இருந்த கிரிக்கெட் வீரர்களின் மனநிலையும் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களின் மனநிலையும் முற்றிலுமாக மாறிவிட்டது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement