இந்தியாவுக்கு துணை கேப்டனே வேணாம், கே.எல் ராகுலை நீக்கிட்டு அவருக்கு சான்ஸ் கொடுங்க – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றாலும் துணை கேப்டனாக வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் 20, 15, 1 என மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். கடந்த ஒரு வருடமாகவே அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் சுமாராக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். இருப்பினும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு பெற்று வந்ததால் ஏராளமான விமர்சனங்களை எழுந்தன.

KL-Rahul

அதை சமாளிக்க முடியாத பிசிசிஐ வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவருடைய துணை கேப்டன்சிப் பதவியை பறித்தது போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பறித்துள்ளது. அதனால் மார்ச் 1ஆம் தேதி துவங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெளிநாடுகளில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ள ராகுலுக்கு இந்த மோசமான தருணத்தில் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2வது போட்டிக்கு பின் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

- Advertisement -

துணை கேப்டனே தேவையில்லை:
இந்நிலையில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களில் துணை கேப்டனே தேவையில்லை என்று முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதனால் தற்சமயத்தில் தடுமாறும் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு 3வது போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் அதிரடியாக பேசியது பின்வருமாறு.

Shubman Gill

“தற்போதைய நிலைமையில் துணை கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும். அவர்கள் ராகுலுடைய பார்ம் மற்றும் மனநிலை பற்றி அறிவார்கள். அத்துடன் அவர்கள் சுப்மன் கில் போன்ற ஒருவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிவார்கள். மேலும் நான் எப்போதும் இந்தியாவுக்கு துணை கேப்டன் நியமிக்கப்பட வேண்டியதில்லை என்று நம்புபவன். அதற்கு பதில் நான் எப்போதும் சிறந்த 11 பேர் அணியுடன் களமிறங்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டவன். ஒருவேளை கேப்டன் தற்காலிகமாக களத்திற்கு வெளியே சென்றால் நீங்கள் சிக்கலை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் அந்த நேரத்தில் பொறுப்பேற்க கூடிய ஒரு வீரரை பூஜ்ஜியமாக்குவீர்கள்”

- Advertisement -

“ஒருவேளை துணை கேப்டன் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரது இடத்தில் வேறு ஒருவர் விளையாடலாம். அதனால் குறைந்தபட்சம் அந்த பதவியாவது இருக்காது. நான் அப்பட்டமாகவும் மிருகத்தனமாகவும் ஒரு கருத்தை சொல்ல வேண்டுமெனில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு துணை கேப்டன் தேவையில்லை. வெளிநாடுகளில் மட்டுமே சூழ்நிலை வித்தியாசமாக இருக்கும். எனவே உங்களுடைய உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் போன்றவர் அந்த இடத்தில் விளையாட வேண்டும். அவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தேர்வு குழுவின் கதவை அடித்து சவாலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்”.

Shubman-Gill

“எனவே தற்போது ராகுல் துணை கேப்டனாக இல்லாததால் இது பற்றி அணி நிர்வாகம் முக்கிய முடிவு எடுக்க வேண்டும். மேலும் ராகுல் மிகச் சிறந்த திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அவருடைய தற்போதைய ஃபார்ம் மற்றும் மனநிலையை நீங்கள் பார்க்க வேண்டும். அவரைப் போன்ற திறமையுள்ள வீரர்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக நீங்கள் வெற்றி முடிவுகளை உருவாக்க வேண்டும்.

- Advertisement -

அந்த இடத்தில் அவரைப் போன்ற நிறைய வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடுவதற்கான கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ராகுல் விளையாடும் பேட்டிங் வரிசை மட்டுமல்லாமல் பவுலிங் வரிசையிலும் நிறைய வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : நான் கஷ்டப்பட்ட நேரத்துல தோனி என்கிட்ட சொன்னது இந்த வார்த்தைகள் தான் – மனம்திறந்த விராட் கோலி

அப்படி நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ராகுலுக்கு 3வது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா அல்லது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement