நான் கஷ்டப்பட்ட நேரத்துல தோனி என்கிட்ட சொன்னது இந்த வார்த்தைகள் தான் – மனம்திறந்த விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலி தனது வாழ்வின் கடினமான நேரத்தில் தோனி எவ்வாறு உதவினார் என்பது குறித்து அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்து அற்புதமான பயணத்தை மேற்கொண்ட விராட் கோலிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை சோதனை காலகட்டமாகவே இருந்தது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் தனி ஆளுமை நடத்தி வந்த விராட் கோலியால் அந்த இரண்டு வருடங்கள் சதம் அடிக்க முடியாமல் போனது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

virat kohli 166

- Advertisement -

மேலும் அவருக்கு ஓய்வினை கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த கடினமான கட்டத்தை எல்லாம் தாண்டி விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பி உள்ளதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி இப்படி கடினமான நேரத்தை எதிர்கொள்ளும்போது தோனி எவ்வாறு உதவினார். அவர் எவ்வாறு ஆதரவு கொடுத்தார் என்பது குறித்து கோலி தற்போது அண்மையில் மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : என்னுடைய கடினமான நேரத்தில் தோனி மட்டும் தான் என்னை தொடர்பு கொண்டார். மற்றவர்களிடம் என் என்னுடைய செல்போன் நம்பர் இருக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் தொலைக்காட்சியில் எனக்கு பரிந்துரை செய்து கொண்டிருந்தார்கள். தோனி ஒருவர் மட்டுமே எனக்கு போன் செய்து ஆதரவினை கொடுத்தார்.

Virat-Kohli-1

சாதாரணமான நாட்களில் தோனியை நாம் தொடர்பு கொள்ளவே முடியாது. ஏனெனில் அவர் அவ்வளவாக தொலைபேசியை பயன்படுத்த மாட்டார். ஆனால் தோனியே எனக்கு இரண்டு முறை போன் செய்து நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது பேசியிருக்கிறார். அப்போது தோனி ஒரு முறை என்னிடம் கூறுகையில் :

- Advertisement -

நீங்கள் வலிமையானவராகவும், பலம் வாய்ந்த தனிநபராகவும் இருப்பீர்கள் என எதிர்பார்க்கப்படும் போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்பதற்கு மக்கள் மறந்து விடுகிறார்கள் என்று கூறினார். அவர் கூறிய அந்த வார்த்தை என் மனதை தொட்டது. ஏனென்றால் நான் எப்போதுமே மிகவும் நம்பிக்கை வைத்துள்ள, மனதளவில் வலிமையான வீரராக பார்ப்பவர் என்றால் அது தோனி தான். அவரே எனக்கு நம்பிக்கை அளித்த போது என் மீது எனக்கும் நம்பிக்கை கிடைத்தது.

இதையும் படிங்க : டி20 பற்றி தெரியாத ட்ராவிட்டுக்கு என்ன வேலை? இந்திய அணியில் அந்த மாற்றத்தை செய்ங்க – ஹர்பஜன் நேரடி கோரிக்கை

அதன் பின்னரே எனக்கு அவருடைய வார்த்தைகளை புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் தோனியும் இது போன்ற நிலையை கடந்து வந்துள்ளார். அவரது அனுபவத்தை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டது என்னை அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது எனவே என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement