11 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. 280.55 ஸ்ட்ரைக் ரேட்டில் நேபாளை துவம்சம் செய்த நமீபியா வீரர்.. ரோஹித்தை முந்தி உலக சாதனை

Namibia
- Advertisement -

நேபாள் நாட்டில் நேபாளம், நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் துவங்கியுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டி கீர்த்திபூர் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் நேபாள் அணியை அதனுடைய சொந்த மண்ணில் நமீபியா எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மைக்கேல் வேன் லிங்கன் தடுமாற்றமாக செயல்பட்டு 20 (19) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜேபி கோட்சி 11 (9) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஜான் ஃப்ரைலிங்க் 5 (7) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் மாலன் க்ருகர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
ஆனால் அடுத்ததாக வந்த ஜான் நிக்கோல் லாப்ட்டி-ஈட்டன் அவருடன் சேர்ந்து அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் களமிறங்கியது முதலே பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் வெறும் 18 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினர். நேரம் செல்ல செல்ல ஓயாமல் இருமடங்கு வேகமாக விளையாடிய அவர் வெறும் 33 பந்துகளில் சதமடித்து 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 101 (36) ரன்களை 280.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை ஜான் நிக்கோல் லாப்ட்டி-ஈட்டன் படைத்தார். இதற்கு முன் 2023இல் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள் வீரர் கௌசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் முழு அந்தஸ்து பெற்ற நாடுகளில் 2017இல் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் ரோகித் சர்மா 2017இல் வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 35 பந்துகளில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அதை உடைத்த அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் பேட்டிங் செய்த மாலன் க்ருகர் 59* (48) ரன்களில் அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் நமிபியா 206/4 ரன்கள் எடுக்க நேபாள் சார்பில் அதிகபட்சமாக ரோகித் பவுடேல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 207 ரன்களை சேசிங் செய்த நேபாள் அணிக்கு குசல் புர்டேல் 0, ஆசிப் ஷேக் 6 ரன்களில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: இந்தியா ஆமை மாதிரி கரை சேர்வாங்க.. நீங்க முயல் மாதிரி போங்க.. இங்கிலாந்தை விமர்சித்த சேவாக்

இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் ரோகித் பவுடேல் 42 (24) கௌசல் மல்லா 32 (21) திபேந்திர சிங் ஆரி 48 (32) ரன்கள் எடுத்துப் போராடி ஆட்டமிந்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் கடைசியில் சொம்பல் கமி 26 (11) ரன்கள் எடுத்தும் 18.5 ஓவரில் நேபாளை 186 ரன்களுக்கு சுருட்டிய நம்பியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரூபென் டிரம்ப்பெல்மேன் 4, ஜான் நிக்கோல் லாப்ட்டி-ஈட்டன் 2, ஜான் பிரைலிங்க் 2, பெர்னர்ட் ஸ்ஹோல்ட்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement