
இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக நடைபெற இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியானது இந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு சொந்த மண்ணில் இந்த டெஸ்ட் தொடர் நடப்பதனால் அது இங்கிலாந்து அணிக்கு சாதகத்தை அளிக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித் பும்ராவை எதிர்கொள்ள தன்னிடம் சிறப்பான திட்டம் இருப்பதாகவும், அதன்படியே பயணித்து இந்த தொடரில் பும்ராவிற்கு எதிராக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான் துவக்க வீரராக விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது.
ஏனெனில் துவக்க வீரராக களமிறங்கும் போது பந்து ஸ்விங் ஆகி வந்தது. அப்படி போட்டியின் ஆரம்பத்திலேயே ஸ்விங்காகும் பந்துகளை எதிர்கொண்டதனால் அது எனக்கு நல்ல பயிற்சியாகவும் அமைந்தது. அதேபோன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். இந்த இரண்டு தொடர்களும் எனக்கு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் அமைந்தது.
தற்போது நான் நல்ல முறையில் தயாராகி விட்டேன். இன்னும் இந்திய அணிக்கு எதிரான தொடர் துவங்க 10 நாட்கள் இருப்பதால் அதற்குள் இன்னும் சிறப்பான முறையில் தயாராகி விடுவேன் என்றும் புத்துணர்ச்சியுடன் இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர் : பும்ரா எங்கள் அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்பது எனக்கு தெரியும்.
இதையும் படிங்க : இது நடந்தா ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் சான்ஸ் திருந்திருக்கு.. வந்து விளையாடலாம்.. கம்பீர் புதிய கருத்து
ஆனால் நான் ஏழாவது இடத்தில் களமிறங்குவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை என்னால் முன்கூட்டிய பார்க்க முடியும். அதனால் அவரது பந்துவீச்சை மீண்டும் மீண்டும் பார்த்து அவருக்கு எதிரான திட்டங்களை தீட்ட இருக்கிறேன். அதோடு பும்ராவை எதிர்கொள்ள சில வியூகங்களையும் நான் வைத்துள்ளதால் அவரை மிகச் சிறப்பாக எதிர்கொள்வேன் என ஜேமி ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.