இது நடந்தா ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் சான்ஸ் திருந்திருக்கு.. வந்து விளையாடலாம்.. கம்பீர் புதிய கருத்து

Gautam Gambhir 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சுப்மன் கில் தலைமையிலான சாய் சுதர்சன் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதே போல கருண் நாயர் 8 வருடங்கள் கழித்து மீண்டும் தேர்வானது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படாதது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிராக 2024இல் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் இந்தியாவுக்காக விளையாடினார். அத்தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் மீண்டும் குணமடைந்த போது ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டது.

- Advertisement -

இங்கிலாந்து வாய்ப்பு:

ஆனால் 100% முழுமையாக குணமடையாததால் அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதன் காரணமாக அவரை பிசிசிஐ இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது. அதைத்தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடி மும்பை கோப்பையை வெல்ல உதவிய அவர் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தாவின் கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.

அதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்த ஸ்ரேயாஸ் தலைமையில் மும்பை 2024 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்று சாதனை படைத்தது. இவை அனைத்தையும் விட 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அப்படியே 2025 ஐபிஎல் தொடரில் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் 14 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை ஃபைனல் அழைத்துச் சென்று அசத்தினார்.

- Advertisement -

வாய்ப்பு திறந்திருக்கு:

அப்படி உச்சகட்ட ஃபார்மில் இருந்தும் அவருக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காதது விமர்சனங்களை உண்டாக்கியது. அது பற்றி கேட்ட போது “தற்சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடமில்லை” என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறினார். அதே போல “ஸ்ரேயாஸை தேர்ந்தெடுக்க நான் தேர்வாளர் கிடையாது” என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 5க்கு 5.. இது நடந்தா விராட் கோலி ஓய்வை வாபஸ் பெற்று இந்தியா விளையாட வருவாரு.. மைக்கேல் கிளார்க்

இந்நிலையில் இங்கிலாந்தில் ஏதேனும் பேட்ஸ்மேன் காயத்தை சந்தித்தால் ஸ்ரேயாஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நல்ல ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் அணியில் சேர்க்கப்படுவார்கள். எங்களால் 18 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் நல்ல ஃபார்மில் சிறப்பாக செயல்படக்கூடிய யாராக இருந்தாலும் இந்திய அணிகள் அவர்களுக்கான வாய்ப்பு திறந்திருக்கிறது என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement