- Advertisement -
உலக கிரிக்கெட்

111 ரன்ஸ்.. இலங்கையின் ஆதிக்கத்தை உடைத்த 24 வயது வீரர்.. இங்கிலாந்துக்காக 94 வருட சாதனை

இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், கிறிஸ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் 18, டான் லாரன்ஸ் 30, கேப்டன் ஓலி போப் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய ஸ்மித்:

அதனால் 67/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் போராடி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அவருடன் எதிர்ப்புறம் சேர்ந்து விளையாடிய ஹரி ஹரூக் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 56 ரன்கள் குவித்து ஜெயசூர்யா சூழலில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த கிறிஸ் ஓக்ஸ் 25, கஸ் அட்கின்சன் 20 ரன்களில் போராடி அவுட்டாகி சென்றார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து இலங்கைக்கு சவாலை கொடுத்த ஜேமி ஸ்மித் சதமடித்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 111 ரன்கள் விளாசி இங்கிலாந்தை காப்பாற்றி ஆட்டமிழந்தார். இறுதியில் மார்க் வுட் அதிரடியாக 22 (13) ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 358 ரன்கள் குவித்தது.

- Advertisement -

94 வருட சாதனை:

இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4, பிரபத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் காரணமாக இலங்கையை விட இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றது. அதற்கு மிகவும் முக்கிய காரணமான ஜேமி ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் சதமடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இனிமேலும் அப்படி சொல்ல முடியாது.. கேஎல் ராகுலுக்கு அந்த வாய்ப்பும் முடிஞ்ச்சு.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

சமீபத்தில் அறிமுகமான அவர் தன்னுடைய 4வது போட்டியில் 24 வருடம் 41 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த கடந்த 1930ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் லெஸ் அமிஸ் 24 வருடம் 63 நாட்களில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். தற்போது ஜேமி ஸ்மித் அந்த 94 வருட சாதனையை உடைத்துள்ளார்.

- Advertisement -