இனிமேலும் அப்படி சொல்ல முடியாது.. கேஎல் ராகுலுக்கு அந்த வாய்ப்பும் முடிஞ்ச்சு.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அந்தத் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். அதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றபடி கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களும் ஜெய்ஸ்வால், ரியான் பராக் போன்ற இளம் வீரர்களும் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை இனிமேலும் விக்கெட் கீப்பர் என்று சொல்ல முடியாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிய கேஎல் ராகுல் பின்னர் டாப் ஆர்டரில் அசத்தத் துவங்கினார்.

- Advertisement -

பேட்ஸ்மேன் மட்டுமே:

அதன் காரணமாக ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளியாக அவர் 2021 – 2022 காலகட்டங்களில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். சொல்லப்போனால் அதே காலகட்டத்தில் அவரை அடுத்த கேப்டனாகவும் வளர்க்க பிசிசிஐ முயற்சித்தது. ஆனால் அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய அவர் 2022 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு முக்கிய காரணமானார்.

அதனால் துணை கேப்டன் பதவியை இழந்த அவருக்கு காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக பிசிசிஐ வாய்ப்பு வழங்கியது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய ராகுல் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார். இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் மோசமாக விளையாடிய நிலையில் தற்போது ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து வந்து விட்டார்.

- Advertisement -

கீப்பர் இல்லை:

அத்துடன் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்த ராகுலுக்கு பதிலாக இளம் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே இன்மேலும் ராகுலை கீப்பராக கருத முடியாது என்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க முடியாது. அதாவது இந்திய அணியில் அவருடைய பெயருக்குப்பின் நீங்கள் கீப்பர் என்று எழுத முடியாது”

இதையும் படிங்க: 23 வருடத்துக்கு பின் அரிய போட்டி.. 6 நாட்கள் கொண்ட டெஸ்டில் விளையாடும் இலங்கை.. காரணம் என்ன?

“ஏனெனில் துருவ் ஜுரேலை நீங்கள் இந்திய அணியில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ரிஷப் பண்ட் இல்லாத போது நீங்கள் ராகுலை கீப்பராக பயன்படுத்தியது பரவாயில்லை” என்று கூறினார். மொத்தத்தில் தற்சமயத்தில் 30 வயதை கடந்துவிட்ட ராகுலுக்கு தற்சமயத்தில் டெஸ்ட் அணியில் மட்டுமே பேட்ஸ்மேனாக இடம் உள்ளது. ஆனால் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவரது வாய்ப்பை இளம் வீரர்கள் பிடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement