என்னங்க முடிவு இது? ஜேமி ஓவர்டனை வீணடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – நடந்தது என்ன?

Jamie Overton
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஜேமி ஓவர்டனுக்கு ஏமாற்றம் அளித்த ருதுராஜ் கெய்க்வாட் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. டெல்லி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 40 ரன்களையும், ஸ்டப்ஸ் 38 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

சென்னை சார்பாக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் சி.எஸ்.கே அணியானது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டனுக்கு சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஒருவரை மட்டுமே வீச கொடுத்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை ஜேமி ஒவர்டன் வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 8 ரன்கள் மட்டுமே தேவை.. அபிஷேக் சர்மாவை கடந்து முதலிடத்திற்கு செல்லப்போகும் – கே.எல் ராகுல்

இவ்வேளையில் அவரை போட்டியின் 19-வது ஓவரிலேயே ருதுராஜ் கொண்டுவந்தார். அப்படி தான் வீசிய அந்த ஒரு ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். இப்படி மிகச்சிறப்பான ஒரு பந்துவீச்சாளரை முழு ஓவர்களையும் பந்து வீச வைக்காமல் ஒரே ஒரு ஓவர் வீச வைத்தது பலரது மத்தியிலும் தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement