கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான 19 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 47 லீக் போட்டிகள் முடிவடைந்த வேளையில் மே 5-ஆம் தேதியான இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரின் 48-வது லீக் போட்டியானது நடைபெற உள்ளது.
அபிஷேக் சர்மாவை முந்த காத்திருக்கும் கே.எல் ராகுல் :
இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட இருக்கின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கை வழங்கும் என்பது உறுதி.
இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் டெல்லி அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் அபிஷேக் ஷர்மாவை கடந்து ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக அபிஷேக் ஷர்மா 440 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்து டெல்லி அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் 433 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : முன்னாள் மும்பை ஜாம்பவான் கைரன் பொல்லார்டின் மாபெரும் சாதனையை சமன் செய்த – ரயான் ரிக்கல்டன்
இவ்வேளையில் இன்றைய சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியில் கே.எல் ராகுல் 8 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு தொப்பியினை கைப்பற்றுவார். இந்த இருவருமே அதிரடியான துவக்க ஆட்டக்காரர்களாக இருப்பதால் இறுதிவரை இவர்களுக்குள் நிச்சயம் இந்த போட்டி தொடரும் என்பது உறுதி.



