மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த வீரர்கள் எல்லாம் திமிரா இருகாங்க – பீல்டிங் பயிற்சியாளர் பரபரப்பு புகார்

Pamment
- Advertisement -

பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்தியாவில் நடத்தப்பட்ட 14வது ஐபிஎல் தொடரானது 29 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அந்த வகையில் நியூஸிலாந்து அணியின் வீரர்களான டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி, ஜிம்மி நீஷம், பௌலிங் கோச் ஷேன் பான்ட் மற்றும் பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட் ஆகியோர் விமானம் மூலம் நியூசிலாந்து சென்றடைந்தனர்.

pamment 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து திரும்பியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பம்மண்ட் அந்த அணியின் சீனியர் வீரர்கள் மீது ஒரு புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியைச் சேர்ந்த சில மூத்த வீரர்கள் ஐபிஎல் தொடரின்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட தயக்கம் காட்டினர். அவர்களின் உடல்மொழிகளும் வித்தியாசமாக இருந்தன.

மேலும் ஒரு விஷயத்தை நாங்கள் செய்யக் கூடாது எனக் கூறினால் உடனே முகம் சுளித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு செல்வார்கள். அவர்களை இதைச் செய் அதைச் செய் என கூற முடியாது அவர்களே புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என அதிரடியாக பேசியுள்ளார். அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என சீனியர்களின் பேச்சை அவர்கள் கேட்பதில்லை என்பதை பொருட்டே அவர் இதனை வெளிப்படையாக கூறியுள்ளார்.

mi

மேலும் அந்த சீனியர் வீரர்கள் யார் ? யார் ? என்று அவர் கூறவில்லை. மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டும் கூட வீரர்கள் வீடு திரும்ப முடியாமல் தொடர்ந்து விளையாடுவோம் என்று கூறினார்கள். அந்த ஒரு விடயம் மனதிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சில வீரர்களின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த வேளையிலும் இந்த சீசனை தொடர விரும்புவதாக கூறி வீரர்கள் விளையாடினார்கள். மேலும் இது மக்களுக்கான தொடர் என்பதால் அவர்களின் மகிழ்ச்சிதான் தங்களின் மகிழ்ச்சி என்ற நோக்கில் வீரர்கள் செயல்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement