பிஎஸ்எல் தொடரில் சம்பளம் தரவில்லை ! பாதியிலேயே வெளியேறி அம்பலப்படுத்திய ஆஸி வீரர், பழிவாங்கிய பாகிஸ்தான்

psl
- Advertisement -

பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற பாகிஸ்தான் பிரீமியர் லீக் எனப்படும் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் இந்த வருடம் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இந்த வேளையில் இந்த தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் விளையாடி வருகிறார். அந்த அணி இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் இடம் பிடித்திருந்த அவர் நாளை கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் விளையாடுவதாக இருந்தார்.

- Advertisement -

சம்பளம் தரவில்லை:
இந்நிலையில் இந்த பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தமக்கு சம்பளம் அளிக்கவில்லை என்ற திடீர் குற்றச்சாட்டை இன்று ஜேம்ஸ் பால்க்னர் எழுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் இதன் காரணமாக பிஎஸ்எல் 2022 தொடரில் இருந்து பாதியிலேயே விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் அடுத்த 2 போட்டிகளில் இருந்து விலகுகிறேன். எனது ஒப்பந்தப்படி பணம் செலுத்தாததால் பிஎஸ்எல் தொடரிலிருந்து வெளியேற வேண்டியுள்ளது. சம்பளத்தை பெறுவதற்காக நான் முழு நேரமும் இங்கேயே இருந்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -

அம்பலப்படுத்திய பால்க்னர்:
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்தது பின்வருமாறு. “பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் பெற உதவ விரும்பிய நிலையில் இப்படி பாதியிலேயே வெளியேறுவது வேதனை அளிக்கிறது. ஏனெனில் இங்கு நிறைய இளம் திறமைகள் உள்ளதுடன் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆச்சரியத்தை அளிப்பவர்களாக உள்ளனர். ஆனால் காயத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து நான் பெற்ற சிகிச்சை பற்றி நினைக்கும்போது எனக்கு அவமானமாக உள்ளது. என்னுடைய நிலையை பற்றி நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்காக பல அணிகள் யோசித்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் ஒரு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான சம்பளத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தரவில்லை என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு வீரர் இப்படி குற்றம் சுமத்தியுள்ளது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

- Advertisement -

பழிவாங்கிய பாகிஸ்தான்:
இருப்பினும் இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒருசில பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களும் மறுத்துள்ளார்கள். பொதுவாக பிஎஸ்எல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு 50%-70% என்ற என்ற அடிப்படையில் எந்தவித தடையுமின்றி சம்பளம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில் ஜேம்ஸ் பால்க்னர்க்கு ஏற்கனவே 70% சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக அந்த நாட்டிலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன. மீதி 30% சம்பளத் தொகை பிஎஸ்எல் தொடர் நடை பெற்ற பின்புதான் வழங்கப்படும் என்ற நிலை தெரிந்தும் அந்தத் தொகையை அவர் இப்போதே கேட்பதாக பாகிஸ்தானில் உள்ள பத்திரிக்கையாளர்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

James Faulkner

அது மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அதிகப்படியான மது அருந்திவிட்டு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது. குறிப்பாக குடிபோதையில் ஹோட்டலில் இருந்த பிரமாண்ட மின் விளக்குகள் மீது பேட் மற்றும் ஹெல்மட்டை எரிந்து சேதப்படுத்தியதாகவும் ஜேம்ஸ் பால்க்னர் மீது பதில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தத்தில் அவரின் இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை பிஎஸ்எல் தொடரில் விளையாட தடை விதித்து பழிவாங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது பின்வருமாறு. “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மீது மிஸ்டர் ஜேம்ஸ் பால்க்னர் அளித்துள்ள தவறான குற்றச்சாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுபற்றி விவரமான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளோம்” என பதிலடி கொடுத்துள்ளது. அதாவது பிஎஸ்எல் தொடர் மீது கலங்கம் விளைவிப்பதற்காகவே ஜேம்ஸ் பால்க்னர் இப்படி ஒரு பொய்யான தவறான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பையில் கூட இப்படி ஒரு தெறிக்கவிடும் அதிரடி ஆட்டமா? – தொடர்ந்து அசத்தும் தமிழக வீரர்

அத்துடன் இனிமேல் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்காத வண்ணம் அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைவில் வாழ்நாள் தடை விதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement