
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச்சிறந்த ஃபினிஷராக போற்றப்படுகிறார். ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் தம்முடைய கேரியரில் பெரும்பாலும் அழுத்தமான மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடக்கூடிய தோனி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடுவார்.
அப்படியே கடைசிக்கட்ட ஓவர்களில் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் ஸ்டைலை கொண்ட தோனி ஃபினிஷிங் கலையை பிரபலப்படுத்தினார் என்றே சொல்லலாம். குறிப்பாக 2011 உலகக்கோப்பை ஃபைனல், 2012 செல்கான் கோப்பை முத்தரப்பு ஃபைனலில் அவர் செய்த ஃபினிஷிங் மறக்க முடியாதது. அதனால் தம்மை விட தோனி சிறந்த ஃபினிஷர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் வாகன் ஒருமுறை பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை விராட் கோலி தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர் என்று இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சேசிங் செய்வதில் விராட் கோலியின் புள்ளி விவரங்கள் அற்புதமாக இருக்கிறது. வரலாற்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது அல்லது சேசிங் செய்யும் போது அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை”
“குறிப்பாக 50 ஓவர் ஃபார்மட்டில் சேசிங் செய்யும் போது அவர் அடித்துள்ள சதங்கள் அபாரமானது. அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்த போட்டிகளில் அதிக ரன்கள் (5786), சதங்கள் (27) அடித்த வீரராக விராட் கோலி ஜாம்பவான் சச்சினை (17 சதங்கள்) முந்தி உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் தோனியை விட விராட் கோலியின் சராசரி அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: ஐயோ சாமி வம்பே வேணாம்.. ஆளை விடுங்க.. அதிரடி முடிவை கையிலெடுத்த கே.எல் – உரிமையாளரும் சம்மதம்
அதே போல 2012 ஹோபார்ட் ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக மலிங்காவை தெறிக்க விட்ட விராட் கோலி அபார ஃபினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அதை விட 2022 டி20 உலகக் கோப்பைக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி விராட் கோலி வெற்றி பெற வைத்தார். அவை விராட் கோலி சிறந்த ஃபினிஷர் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றன.