நான் பந்து வீசியதிலேயே அவர் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. இந்திய வீரர் பற்றி ஆண்டர்சன் பேட்டி

James Anderson
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கும் அத்தொடரின் முதல் போட்டியுடன் இங்கிலாந்தின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 22 வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆரம்பக் காலங்களில் கொஞ்சம் தடுமாறினாலும் வருடங்கள் செல்ல செல்ல தம்முடைய அனுபவத்தால் அசத்திய அவர் உலகின் பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தார். சொல்லப்போனால் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தும் இந்த நவீன யுகத்தில் ட்ரெண்ட் போல்ட், பாண்டியா உள்ளிட்ட நிறைய நட்சத்திர வீரர்கள் 35 வயதுக்குள்ளையே கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்ற முடிவை எடுத்துள்ளனர்.

- Advertisement -

சவாலான பேட்ஸ்மேன்:
ஆனால் 41 வயதிலும் தன்னுடைய அற்புதமான ஃபிட்னஸ் மற்றும் அனுபவம் காரணமாக 5 நாட்களைக் கொண்ட கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 187 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 700 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார்.

இப்போதும் தாம் விளையாட விரும்பினாலும் இங்கிலாந்து அணியின் நலனை கருத்தில் கொண்டு வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இந்நிலையில் தம்முடைய கேரியரில் பந்து வீசியதிலேயே இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மிகவும் சவாலை கொடுத்த சிறந்த பேட்ஸ்மேன் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் எதிர்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன் என்று கேட்டால் சச்சின் டெண்டுல்கர் எனச் சொல்வேன். என்னுடைய கேரியரில் விக்கெட்டுகள் அல்லது சிறந்த பவுலிங் என்று சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் 2014இல் இந்தியாவுக்கு எதிராக நான் பேட்டிங்கில் 81 ரன்கள் எடுத்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதை எப்படி செய்தேன் என்று என்னாலேயே நம்ப் முடியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: துணை பயிற்சியாளராக ரோஹித் சர்மாவின் நண்பரை கொண்டு வரும் கம்பீர்.. கர்நாடக வீரரும் இணைய வாய்ப்பு

முன்னதாக உலகின் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு எதிராகத்தான் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 149 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதே போல ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவர் 9 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுட்டாக்கியுள்ளார். அந்த வகையில் மகத்தான ஜாம்பவான் வீரராக விடைபெறும் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து அணி திட்டமிட்டுள்ளது.

Advertisement