அந்த இந்திய வீரரை பாத்து என்னோட பவுலிங்கை டெவெலப் பண்ணிருக்கேன்.. ஓப்பனாக பேசிய ஆண்டர்சன்

James Anderson
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. அத்துடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இருப்பினும் இந்த தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கேப்டன் ரோகித் சர்மா போன்ற இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து வருகிறார். கடந்த 2003இல் அறிமுகமாமி ஆரம்பத்தில் சாதாரண பவுலராக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய அனுபவத்தால் முன்னேறிய அவர் இன்று உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனைப் படைத்துள்ளார்.

- Advertisement -

இந்திய வீரரை பார்த்து:
சொல்லப்போனால் அவருடைய பார்ட்னர் ஸ்டுவர்ட் ப்ராட் 38 வயதில் கடந்த வருடம் ஓய்வு பெற்றார். ஆனால் 41 வயதாகியும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஆண்டர்சன் பலருக்கும் ஏற்படுத்தி உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். இந்நிலையில் ஆரம்பகாலங்களில் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ஜஹீர் கானை தன்னுடைய பந்து வீச்சில் முன்னேற்றம் செய்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய இந்திய அணியில் பும்ரா உலகத்தரம் வாய்ந்த வீரராக செயல்படுவதாக பாராட்டும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “நான் அதிகமாக பார்த்து கற்றுக்கொள்ள முயற்சித்த ஜஹீர் கான் ஒருவர். குறிப்பாக பந்தை எப்படி ஸ்விங் செய்கிறார், ஓடி வரும் போது பந்தை எப்படி கவர் செய்கிறார் என்பது போன்றவற்றை அவரைப் பார்த்து அவருக்கு எதிராக இங்கே நான் விளையாடிய போது என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்ற முயற்சித்தேன்”

- Advertisement -

“பும்ரா போன்றவரின் தரத்திற்கு நீங்கள் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் முக்கிய பங்காற்றும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை அவர் சிறப்பாக செய்கிறார். அவரிடம் தொடர்ச்சியான நல்ல வேகம் மற்றும் துல்லியம் இருக்கிறது. ஓலி போப்புக்கு எதிராக அவர் வீசிய அபாரமான யார்கரை நாங்கள் பார்த்தோம். தற்போது உலகின் நம்பர் ஒன் பவுலராக அவர் இருப்பது எதர்ச்சியான அதிர்ஷ்டம் கிடையாது”

இதையும் படிங்க: இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 4 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

“எனவே உலகத்தரம் வாய்ந்த பவுலரான அவர் எங்களுக்கு எதிராக இப்படி பந்து வீசுவதில் நாங்கள் ஆச்சரியப்படவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ளது. அதில் வென்று குறைந்தபட்சம் இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து தயாராகி வருகிறது.

Advertisement