இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Pujara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஆண்டுதோறும் இந்திய வீரர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அவர்களின் தகுதிக்கு ஏற்ப சில வரைமுறைகளுக்கு உட்பட்டு அவர்களின் பிரிவுகளின் கீழ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்திய அணிக்காக ஏ,ஏ பிளஸ், பி, சி என நான்கு பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை கணக்கில் கொண்டு அந்தந்த வீரர்கள் அந்தந்த தகுதியின் அடிப்படையில் சம்பளத்தை பெரும் வகையில் ஒப்பந்த கையெழுத்துக்கள் பதிவாகும். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் சில சீனியர் வீரர்களுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுகுறித்த தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் உலகின் பணக்கார கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ பல்வேறு சீனியர் வீரர்களை ஆதரித்து வந்த வேளையில் தற்போது அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி சீனியர் வீரர்களை கழட்டி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா, ரஹானே மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக தற்போது இளம் வீரர்களுக்கு சம்பள ஒப்பந்த பட்டியலில் இடம் வழங்கியுள்ளது.

- Advertisement -

மேலும் பிசிசிஐ-யின் உத்தரவிற்கு பின்படியாத இசான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பட்டியலில் இருந்து நீக்கியுள்ள பிசிசிஐ-யானது மற்றவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப சம்பள பட்டியலில் பெயரை நிர்ணயித்து அவர்களுக்கான தொகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான புஜாரா உமேஷ் யாதவ் போன்ற சீனியர் வீரர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய இளம் வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : இங்க யாரும் பெருசில்ல.. இந்தியாவில் அதுக்கு பஞ்சமும் இல்ல.. ரோஹித் சர்மாவின் கருத்தை வரவேற்ற வெங்சர்கார்

மேலும் இனிவரும் ஒப்பந்தத்தில் எந்த வீரராக இருந்தாலும் ரஞ்சி தொடரில் இடம் பிடித்து விளையாடவில்லை எனில் அவர்கள் ஒப்பந்தப்பட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement