இங்க யாரும் பெருசில்ல.. இந்தியாவில் அதுக்கு பஞ்சமும் இல்ல.. ரோஹித் சர்மாவின் கருத்தை வரவேற்ற வெங்சர்கார்

Dilip Vengsarkar 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக ஒரு காலத்தில் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்ற நிலைமை இருந்தது.

இருப்பினும் நாளடைவில் ஐபிஎல் தொடர் வந்ததால் அதில் ஓரிரு வருடங்கள் அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் சிவப்பு கம்பளம் விரித்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களுக்கு முக்கியதத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன. அந்த சூழ்நிலையில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் பணிச்சுமையால் பாதியிலேயே வெளியேறிய இஷான் கிசானை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

யாரும் பெருசில்ல:
மேலும் ஃபிட்டாக இருக்கும் வீரர்கள் ரஞ்சிக்கோப்பில் விளையாடுமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எச்சரித்திருந்தார். ஆனால் அதைக் கேட்காத இஷான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லேசான காயமடைந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதைக் கேட்காத அவர் பரோடாவுக்கு எதிரான காலிறுதியில் மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அப்படி நட்சத்திர வீரர்கள் ரஞ்சிக்கோப்பையில் புறக்கணிப்பதைப் பற்றி ராஞ்சியில் நடந்த 4வது போட்டியின் முடிவில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இனிமேல் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற பசியுடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வருபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அவருடைய கருத்தை வரவேற்கும் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார் இந்திய அணியை விட இங்கு யாரும் பெரியவர் கிடையாது என கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரஞ்சியில் விளையாடுவது முக்கியமாகும். அது இந்தியாவில் உள்ள மைதானங்களில் ஸ்பின்னர்களை நீங்கள் சிறப்பாக எதிர்கொள்ள உதவும். அதன் உதவியால் வெளிநாடுகளில் நீங்கள் விளையாடும் போது சுழல் பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்ள முடியும்”

இதையும் படிங்க: திலக், ரிங்குவுக்கு பிரமோஷன்.. இந்திய அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை அறிவித்த பிசிசிஐ

“எனவே ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் சொந்த விஷயம். ஆனால் ஒரு வீரர் ரஞ்சிக் கோப்பை விளையாட விரும்பவில்லையெனில் அவருக்கு பதிலாக வேறு தகுதியான வீரரை தேர்வு செய்ய இந்தியாவில் ஏராளமானவர்கள் உள்ளனர். இங்கு யாரும் இந்திய கிரிக்கெட்டை விட பெரிது கிடையாது. யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல” என்று கூறினார்.

Advertisement