திலக், ரிங்குவுக்கு பிரமோஷன்.. இந்திய அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை அறிவித்த பிசிசிஐ

Team India 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக 2023 – 24 காலண்டர் வருடத்தில் விளையாடப் போகும் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகிய 2 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வெளிப்படையாக கேட்டுக் கொண்டிருந்தனர்

ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடத் தவறிய காரணத்தால் அந்த 2 வீரர்களும் சம்பள ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் ஏ ப்ளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சம்பளப் பட்டியல்:
வருடத்திற்கு உச்சக்கட்டமாக 7 கோடி ரூபாய்களை சம்பளமாக பெறும் ஏ ப்ளஸ் பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அதற்கடுத்ததாக 5 கோடி கொடுக்கப்படும் ஏ பிரிவில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது முக்கிய வீரர்களாக உருவெடுத்து வரும் சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் பி பிரிவிலிருந்து தற்போது ஏ பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். அதை தொடர்ந்து 3 கோடி சம்பளம் பெறும் வீரர்களுக்கான பி பிரிவு பட்டியலில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

இதில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஜெய்ஸ்வால் நேரடியாக பி பிரிவுக்கு வந்துள்ளார். இறுதியாக ஏதேனும் சில வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் வீரர்களுக்கு சம்பளமாக 1 கோடி கொடுக்கப்படும் சி பிரிவில் சமீப காலங்களில் அபாரமாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ரிங்கு சிங், திலக் வர்மா ஆகிய இளம் கிரிக்கெட் வீரர்கள் முதல் முறையாக தேர்வாகியுள்ளனர்.

இதையும் படிங்க: அப்படியே போய்டுங்க.. ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. வெளியான அறிவிப்பு

அவர்களுடன் சர்துல் தாகூர், ருதுராஜ் கைக்வாட், கம்பேக் கொடுத்துள்ள சிவம் துபே, ரவி பிஸ்னோய், தமிழக வீரர் வாசிங்க்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷிதீப் சிங், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் படிடார் ஆகியோரம் ஒரு கோடி சம்பள பிரிவில் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இந்த ஒப்பந்த பட்டியலிலிருந்து புஜாரா, ரகானே, ஷிகர் தவான் போன்ற சீனியர்கள் மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement