அடுத்த 4 ஆவது போட்டியில் கோலிக்கு தொந்தரவு தரும் இவர் விளையாடமாட்டாராம் – விவரம் இதோ

Anderson-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற காரணத்தினால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

- Advertisement -

ஏற்கனவே இரண்டாவது போட்டியின் முடிவில் இந்திய அணி பலமாக இருந்தவேளையில் மூன்றாவது போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவியதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டது. அதேவேளையில் இங்கிலாந்து அணியிலும் சில மாற்றங்கள் ஏற்படும் தெரியவந்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் சீனியரான ஆண்டர்சன் நான்காவது போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றும் அவருக்கு ஓய்வு தர அந்த அணியின் நிர்வாகம் எண்ணுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் வேலை பளுவை கணக்கில் கொண்டு அவருக்கு இந்த ஓய்வு அளிக்கப்படுகிறது என்று தெரிகிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் 39 வயதான ஆண்டர்சன் இதுவரை 116.3 ஓவர்களை இந்திய அணிக்கு எதிராக வீசியுள்ளார்.

anderson 2

இந்திய பவுலர்கள் யாரும் இவ்வளவு ஓவர்கள் இந்த தொடரில் வீசவில்லை. இந்நிலையில் அவரது பணிச் சுமையை குறைக்கும் வகையில் இந்த ஓய்வு அவருக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் ஆண்டர்சனோ இந்தியா அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் தான் விளையாட விரும்புவதாக முன்னரே சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா ? அல்லது விளையாடுவாரா ? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Anderson

ஒருவேளை அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என்றால் விராட் கோலிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் அனல் பறக்கும் ஆட்டம் இருக்காமல் போகலாம். இந்த தொடர் முழுவதும் விராட் கோலியை சீண்டி வரும் அவர் இம்முறை தொந்தரவு செய்யாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 630 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்திய அணிக்கு எதிராக 131 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement