Ashes 2023 : பிரியும் 1000 விக்கெட்களை எடுத்த உலக சாதனை ஜோடி – நண்பன் ப்ராட் ஓய்வு குறித்து கலங்கினாரா ஆண்டர்சன்

- Advertisement -

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் கோப்பையை தக்க வைத்து அசத்தியது. அதனால் லண்டனில் நடைபெற்று வரும் கடைசி போட்டியில் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து விளையாடி வருகிறது. அதை விட அந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 3வது நாளின் முடிவில் நட்சத்திர இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 டி20 உலக கோப்பையில் இந்தியாவின் யுவ்ராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை வழங்கி மோசமான உலக சாதனை படைத்து ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவுக்குள்ளனர். இருப்பினும் மனம் தளராமல் பயிற்சிகளை எடுத்து போராடிய அவர் 2010 டி20 உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்காற்றி 2014 வரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

கலங்கிய ஆண்டர்சன்:
அதன் பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அனுபவத்தால் அசத்தி வந்த அவர் 165 போட்டிகளில் 602* விக்கெட்களை சாய்த்து அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி காணலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொதப்பல் பவுலராக துவங்கிய அவர் இன்று 845 சர்வதேச விக்கெட்களை எடுத்த ஜாம்பவானாக ஓய்வு பெறுவதால் யுவ்ராஜ் சிங் உட்பட அனைத்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மனதார வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தம்முடன் ஒன்றாக இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்ட தம்முடைய நண்பன் ப்ராட் ஓய்வு பெறுவதை தாங்க முடியாமல் மற்றொரு இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீர் மல்க பேசியுள்ளார். குறிப்பாக ஸ்டுவர்ட் ப்ராட் ஓய்வு பெறுவது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேள்வி எழுப்பப்பட்ட போது நண்பனின் பிரிவு பற்றி வார்த்தைகளால் விவரிக்க தடுமாறிய ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுது பேட்டியை கொடுக்க முடியாமல் பாதியிலேயே சென்றார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய மிகச்சிறந்த நண்பரான அவர் கடந்த பல வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் பெரும்பாலான போட்டிகளில் எனக்காக இருந்தார்” என்று கூறினார். அதே சமயம் இது அலெஸ்டர் குக் ஓய்வு பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். எப்படியானாலும் சாதரண பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓரிரு வருடங்கள் படிக்கும் நண்பர்கள் பிரியும் போது ஏற்படும் சோகத்தையே வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அந்த நிலையில் 15 வருடங்களாக நாட்டுக்காக ஒன்றாக இணைந்து விளையாடிய ப்ராட் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது நிச்சயமாக ஆண்டர்சனுக்கு மிகப்பெரிய சோகமாக இருக்கும் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை இணைந்து எடுத்த பவுலிங் ஜோடி என்ற மாபெரும் உலக சாதனையையும் அவர்கள் படைத்துள்ளனர். அதில் ஆண்டர்சன் 537, ப்ராட் 500 என இந்த ஜோடி மொத்தமாக 1037 விக்கெட்களை ஒன்றாக எடுத்து அந்த மகத்தான உலக சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

2வது இடத்தில் ஷேன் வார்னே – கிளன் மெக்ராத் ஜோடி 1001 விக்கெட்டுகளுடன் உள்ளனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் வார்னே – மெக்ராத் சுழல் – வேகம் ஜோடி என்ற நிலைமையில் உலகிலேயே 1000 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சு ஜோடி என்ற என்ற உலக சாதனையையும் அவர்கள் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க:வீடியோ : 13 சரவெடி சிக்ஸர்கள், 16 பந்தில் 50 – மாபெரும் ஃபைனலில் அடித்து நொறுக்கி மும்பையை வெற்றி பெற வைத்த நிக்கோலஸ் பூரான்

அப்படிப்பட்ட மகத்துவமான உலக சாதனை ஜோடி இந்த டெஸ்ட் போட்டியுடன் பிரிவது என்பது ரசிகர்களுக்கே சோகமாக இருக்கும் போது ஆண்டர்சனில் கண்ணில் கண்ணீர் வரவழைத்ததில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம்.

Advertisement