டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத்தின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் – விவரம் இதோ

Anderson-3

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 381 ரன்கள் குவித்தனர். இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் 110, நிரோஷன் டிக்வெல்லா 92 ரன்கள் குறித்து சிறப்பாக விளையாடினர்.

england

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 344 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இலங்கை அணி 37 ரன்கள் முன்னிலை வகித்தது. இதில் ஜோ ரூட் மட்டும் 186 ரன்கள் குவித்தார். இலங்கை அணியை தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து அணி இலங்கை அணியை வெறும் 126 ரன்களில் சுருட்டியது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 4 விக்கெட் மட்டும் இழந்து சிறப்பாக விளையாடி 164 ரன்கள் குவித்து அபார வெற்றியை கண்டது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போது டெஸ்ட்டில் வேகப்பந்து வீச்சாளராக ஒருமுக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது வேகப்பந்து வீச்சாளராக அதிக முறை 5 விக்கெட் எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஆண்டர்சன்.

anderson 2

இவர் இங்கிலாந்து அணிக்காக 157 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 முறை ஐந்து விக்கெட்டுகள் மேல் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத்தின் சாதனையை முறியடித்திருக்கிறார். மெக்ராத் 29 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்த சாதனையை இலங்கை ஜாம்பவான் முரளிதரன் 67 முறையும், ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னே 37 முறையும் செய்திருக்கின்றனர்.

- Advertisement -

anderson 2

ஒட்டுமொத்தமாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆண்டர்சன் தற்போது 6-வது இடத்தில் இருக்கிறார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த டாப் 6 வீரர்கள் வருமாறு:-

1.முரளீதரன் (இலங்கை) -67 முறை (132 டெஸ்ட்).

2.வார்னே (ஆஸ்தி ரேலியா)- 37 (145).

3.ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து)- 36 (86).

4. கும்ப்ளே (இந்தியா) 35- (132).

5. ஹெராத் (இலங்கை)-34 (93).

6. ஆண்டர்சன் (இங்கிலாந்து)- 30 (157).