டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்து வரலாறு படைத்த ஆண்டர்சன் – பெரிய விஷயம்தான்

Anderson
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மூன்று போட்டிகளிலுமே பிரமாதமான வெற்றியைப் பெற்று ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளும் தற்போது சம்பிரதாயங்கள் ஆட்டங்களாகவே நடைபெற்று வரும் வேளையில் இங்கிலாந்து அணி பலம் இழந்து காணப்படுகிறது.

aus vs eng

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடுவதன் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி கடந்த 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமான ஆண்டர்சன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியோடு சேர்த்து மொத்தம் 169 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதன்மூலமாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் ஆண்டர்சன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருந்தார்.

Anderson

அவருக்கு அடுத்ததாக தற்போது 169 டெஸ்ட் போட்டிகளுடன் ஆண்டர்சன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் 168 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மிகச் சிறப்பான பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவங்களால எனக்கு ஹார்ட் அட்டேக் வந்துரும் போல – பதறிப்போன அம்பயர் – நடந்தது என்ன?

முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்டுகள், இரண்டாவது இடத்தில் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகள், மூன்றாவது இடத்தில் ஆண்டர்சன் 640 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement