சர்வதேச கிரிக்கெட்டில் கிளென் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி ஆண்டர்சன் வரலாற்று சாதனை – 40 வயதில் அசத்தல்

James Anderson
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே லண்டன் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

ENG vs RSA Ollie Robinson

- Advertisement -

அதனை தொடர்ந்து மான்செஸ்டர் நகரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் தங்களது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 415 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.

anderson 2

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 40 வயதான ஆண்டர்சன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 664 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 269 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகள் என 367 போட்டிகளில் 951 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக கிளென் மெக்ராத் 949 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது ஆண்டர்சன் அவரை பின்னுக்கு தள்ளி தற்போது 951 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : போன வருஷம் அவரால முடியல. ஆனா இந்த வருஷம் அசத்துவார் – சவுரவ் கங்குலி ஓபன்டாக்

ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முரளிதரன் 1347 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷேன் வார்னே 1001 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement