ஆசியக்கோப்பை : போன வருஷம் அவரால முடியல. ஆனா இந்த வருஷம் அசத்துவார் – சவுரவ் கங்குலி ஓபன்டாக்

Ganguly
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஆசியக் கோப்பை தொடரானது கோலாகலமாக துவங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் மோதும் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வேளையில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியானது இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Shaheen-afridi

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கும் வேளையில் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக ஷாஹீன் அப்ரிடி விலகி இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை தரும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் ஷாஹீன் அப்ரிடி ஒருவர் விலகியதால் மட்டும் எந்த விடயமும் மாறாது என இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவரான சவுரவ் கங்குலி வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று பேசி வருகின்றனர். ஆனால் ஒரு வீரரால் எந்த ஒரு முடிவுமே மாறிவிடாது. வெறும் ஒரு வீரரால் பெரிதாக எந்தவித மாற்றத்தையும் செய்து விட முடியாது. வெற்றி என்பது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியாலே கிடைக்கும்.

Hardik Pandya

இந்திய அணியில் கூட பும்ரா இடம்பெறவில்லை. அதனால் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானது என்று கூற முடியுமா? அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து சிறப்பான பங்களிப்பை அளித்தால் தான் முடிவுகள் சாதகமாக கிடைக்கும் என்று கங்குலி பேசினார். மேலும் ஹார்டிக் பாண்டியாவின் வருகை இந்திய அணிக்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு பாண்டியா தற்போது பந்து வீச்சிலும் நிறைய பங்களிப்பை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அவரால் பந்து வீச முடியாமல் போனது. ஆனால் இம்முறை மிகச் சிறப்பாக மீண்டு வந்து அவர் அணிக்காக மிகச்சரியான பங்களிப்பை வழங்கி வருகிறார் என்று கங்குலி கூறினார்.

இதையும் படிங்க : பாபர் அசாம் பற்றி முதல் முறையாக பேசிய விராட் கோலி – வெளிப்படையாக பாராட்டி என்ன சொன்னர்னு பாருங்க

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த ஆண்டு இதே துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியபோது இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement