- Advertisement -

21 வருஷமா இந்த பிரச்சனை இல்லாம விளையாடியது என்னோட அதிர்ஷ்டம் – ஜேம்ஸ் ஆண்டர்சன் நெகிழ்ச்சி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 704 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையுடன் விடை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இதையடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறும்போது இரு அணி வீரர்களும் அவருக்கு வாழ்த்தை தெரிவித்து விடை கொடுத்தனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் ஆண்டர்சனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் தனது கிரிக்கெட் கரியர் குறித்து ஆண்டர்சன் சிலர் விடயங்களை மனதார பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இன்று காலை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இரு அணி வீரர்களும் எனக்கு கொடுத்த வரவேற்பு என்னை நெகிழ வைத்தது. 21 வருடங்கள் காயம் இல்லாமல் விளையாடியது நம்ப முடியாத முயற்சி. அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் செய்துள்ளதாக நினைக்கிறேன்.

- Advertisement -

என்னுடைய கரியரில் நான் பெரிய காயத்தை சந்தித்தது கிடையாது. இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது என்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி. நீண்ட காலமாக அதனை செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம். பல வீரர்களுடன் நான் பழகியுள்ள ஞாபகம் நினைவுகளை இன்னமும் வைத்துள்ளேன். என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது. தற்போது நான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.

இதையும் படிங்க : 254 ரன்ஸ்.. செமி ஃபைனலில் ஆஸியை ஓடவிட்ட இந்தியா சாம்பியன்ஸ்.. மாஸ் காட்டிய யுவ்ராஜ் படை.. ஃபைனலில் யார்?

எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருக்க நான் விரும்புகிறேன். இந்த பயணத்தில் நான் பல நண்பர்களை சம்பாதித்துள்ளேன். அற்புதமான வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத பயணம் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -